Breaking News

5 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் அதிரடி தடை

அட்மின் மீடியா
0

5 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் அதிரடி தடை


தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதி களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க, தேர்தல் கமிஷனுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழக சட்டசபை தேர்தலில், திருச்சி கிழக்கு, சென்னை பெரம்பூர் என, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.க., தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.

அதேபோல, கரூர் தொகுதி எம்.எல்.ஏ., - எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ., - சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ., - எஸ்.ஜெயகுமார், அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ., இசக்கி சுப்பையா ஆகியோரும் ராஜினாமா செய்தனர்

இவர்களின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக்கோரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞரும், பா.ஜ., நிர்வாகியுமான கே.வெங்கடாஜலபதி, பொது நல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ஆர்.சண்முகநாதன் ஆஜராகி, ''இடைத்தேர்தல் நடத்தி எம்.எல்.ஏ.,வை தேர்ந்தெடுத்த பின், தேர்தல் வழக்கை தாக்கல் செய்த வேட்பாளரை வெற்றி பெற்றவராக நீதிமன்றம் அறிவித்து விட்டால், ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதி என்ற நிலை ஏற்படும்.'

தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, சம்பந்தப்பட்ட தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது என, உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே, தேர்தல் வழக்குகளில் முடிவெடுக்கும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது,'' என்றார். இதனை தலைமை நீதிபதி தர்மாதிகாரி அமர்வு, இடைக்காலத் தடை விதித்தது.

நேற்று கரூரில் பேசிய முதலமைச்சர் விஜய், அங்கு இடைத்தேர்தலில் தி.மு.க.வை வெளுத்துவிட வேண்டும் எனக் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback