சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்பு கொள்ள இலவச உதவி எண் அறிவிப்பு singapen athiradi padai Helpline Number Announcement
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடர்பு கொள்ள இலவச உதவி எண் அறிவிப்பு singapen athiradi padai Helpline Number Announcement
சிங்கப்பெண் அதிரடிப்படை `1091' என்ற இலவச பிரத்யேக எண்ணை வெளியிட்டது காவல்துறை.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்பது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி காவல் உதவியை வழங்கவும், பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய இடங்களில் கண்காணிப்பு பணியை வலுப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை
இதன் மூலம் அவசர காலங்களில் தகவல் பரிமாற்றம் வேகமாக நடைபெறுவதுடன், சம்பவ இடத்திற்கு உடனடி காவல் உதவி வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
இந்த சிறப்பு உதவி எண் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக கூடுதல் பிரத்யேக அழைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உதவி மையம் 24 மணி நேரமும், வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்பட்டு பயிற்சி பெற்ற காவலர்களால் கண்காணிக்கப்படுகிறது. இக்கட்டுப்பாட்டறை புகார்களை பெற்று உடனடி நடவடிக்கையை ஒருங்கிணைக்கின்றது..
- 24x7 பயிற்சி பெற்ற காவலர்களால் கண்காணிக்கப்பட்டு செயல்படும்.
- 1091 என்ற உதவி எண், அவசர கால உதவி எண்ணான 112 உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
- பெண்கள், குழந்தைகள் 1091 என்ற ஒரே உதவி எண் மூலம் நேரடியாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடர்பு கொள்ளலாம்.
- மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் சிங்கப்பெண் படைக்காக கூடுதல் அழைப்பு ஏற்கும் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
- இம்மையம் 24 மணி நேரமும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்படும்.
- பெண்கள், குழந்தைகள் எதிர்கொள்ளும் வன்முறை, குடும்ப வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல் தொந்தரவுகளுக்கும், மிரட்டல், உடனடி காவல் உதவி தேவைப்படும் சூழலுக்கும் தொடர்பு கொள்ளலாம்
Tags: தமிழக செய்திகள்
