இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்! Senior leader of the Communist Party of India C. Mahendran joined the TVK
இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்! Senior leader of the Communist Party of India C. Mahendran joined the TVK
பனையூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இணைந்தார்
1971ம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பயணிக்கும் மகேந்திரன், பல முக்கியப் பொறுப்புகளையும் வகித்து வந்தார்.
நீண்ட கால இடதுசாரிப் பாரம்பரியம் கொண்ட ஒரு கொள்கைவாதி, அண்மையில் தொடங்கப்பட்ட ஒரு இளம் அரசியல் கட்சியில் இணைந்திருப்பது அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
சி. மகேந்திரன் தமிழக இடதுசாரி இயக்கங்களில் மிகவும் மதிக்கப்படும் ஆளுமைகளில் ஒருவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பல தசாப்தங்களாகத் தீவிரமாகப் பணியாற்றியவர். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், மாநிலத் துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். 2015ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர்.
மேடைப் பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், மற்றும் சிந்தனையாளர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டவர்.பொதுவுடைமைக் கோட்பாடுகளில் ஆழமான ஈடுபாடு கொண்ட இவர், தமிழகத்தின் பல்வேறு சமூக, பொருளாதாரப் போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மகேந்திரன், “காசு இல்லாமல் தேர்தலில் வென்று தவெக புரட்சி செய்துள்ளது. பொதுவுடைமை வேர்களை மேலும் வலுப்படுத்துவேன், சிவப்பு துண்டோடு தவெகவில் செயல்பட விரும்புகிறேன். இந்த தேர்தலில் சாதி தோற்கடிக்கப்பட்டுள்ளதை வியந்து பார்க்கிறேன். தவெக பெரிய இயக்கமாக வளர்வதற்கான விதை விதைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தவெக சாதியை ஒழித்துக்கட்டியுள்ளது. ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை விஜய் தந்துள்ளார்” என்றார்.
Tags: தமிழக செய்திகள்
