Breaking News

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து! Peace agreement signed between America and Iran!

அட்மின் மீடியா
0

அமெரிக்கா - ஈரான் இடையே போரை நிறுத்திக் கொள்வதற்கான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பும், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானும் கையெழுத்து!




அமைதி ஒப்பந்தம் 14 அம்ச நிபந்தனை:-

14 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தில் ராணுவ நடவடிக்கைகளை உடனே விலக்கிக் கொள்வது என உறுதி

ஹார்முஸ் நீரிணையில் இருந்து கடற்படையை விலக்கிக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாக 60 நாட்கள் ஆகும்.

அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து ஈரான் மறுகட்டமைப்புக்கு ரூ.28 லட்சம் கோடி நிதி உதவி அளிக்கப்படும் அமெரிக்க அரசு. 

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை நிரந்தரமாக கைவிடுவது, 

அமெரிக்கா 30 நாட்களுக்குள் ஈரானுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகளை திரும்பப் பெற வேண்டும்.

அமைதி ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த இருநாடுகளுக்கும் 60 நாட்கள் அவகாசம் உள்ளது.

60 நாட்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை வணிகக் கப்பல்கள் பாதுகாப்புடன் கடந்து செல்ல ஒத்துழைப்பு வழங்குவதுடன், எந்தவொரு கட்டணமும் ஈரான் வசூலிக்கக் கூடாது.

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கக் கூடாது. ஈரானின் செறிவூட்டப்பட்ட அணுசக்திப் பொருட்களை சர்வதேச அணுசக்தி முகமையின் மேற்பார்வையின் கீழ் அழிப்பதற்கு இரு நாடுகளும் ஒத்துழைக்கும்.

போரினால் பாதிக்கப்பட்ட ஈரானை மறுசீரமைக்க ரூ.28 லட்சம் கோடி நிதி வழங்க அமெரிக்கா உறுதி

ஈரானுக்கு எதிரான அனைத்து வகையான பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவரும். இதற்கான குறிப்பிட்ட கால அட்டவணை இறுதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வகுக்கப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/2067446487492214928

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback