அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு - ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான் ராணுவம்!
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவு - ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான் ராணுவம்!
அமெரிக்காவின் தலையீட்டால் இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பிற்கு இடையே நேற்று மாலை எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், சில மணி நேரங்களிலேயே காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
அதிகாலை இஸ்ரேல் நடத்திய கொடூர வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் ராணுவம் இன்று மீண்டும் மூடி உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று மாலை இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹெஸ்புல்லா இடையே ஒரு தற்காலிகப் போர் நிறுத்தம் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், அது அமலுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல் அதனை அப்பட்டமாக மீறியுள்ளது.
லெபனானின் அரசு செய்தி நிறுவனத் தகவலின்படி, இன்று அதிகாலை தெற்கு லெபனானின் நபாதியா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்களும் ட்ரோன்களும் தொடர் குண்டுவீச்சுகளை நடத்தின. இந்தத் திடீர் வான்வழித் தாக்குதலில் அப்பகுதியில் இருந்த பிரம்மாண்ட குடியிருப்புச் சுவர்களும், பொதுமக்களின் வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டன. இதில் 5 அப்பாவிப் பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பலியாகியுள்ளனர்.
ஜூன் 18 அன்று தான் அமெரிக்காவுடனான தற்காலிக உடன்பாட்டின்படி ஹார்முஸ் நீரிணையை வணிகக் கப்பல்களுக்காக ஈரான் திறந்துவிட்டிருந்தது. ஆனால், இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதால் ஈரான் ஆயுதப் படைகளின் தலைமைப் பீடம் அவசரப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளது:"அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களது சர்வதேச வாக்குறுதிகளையும், அமைதி ஒப்பந்த விதிகளையும் அப்பட்டமாக மீறித் துரோகம் செய்துவிட்டன. இதற்குப் பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில், ஹார்முஸ் நீரிணையை நாங்கள் மீண்டும் முழுமையாக மூடுகிறோம். இது எங்களது 'முதல் படி' மட்டுமே.
இஸ்ரேலின் அத்துமீறல்கள் தொடர்ந்தால், இதைவிடக் கொடூரமான ராணுவ நடவடிக்கைகள் பாயும் என ஈரான் எச்சரித்துள்ளது
Tags: வெளிநாட்டு செய்திகள்
