நீங்கள் வழக்கறிஞர் ஆகவேண்டுமா!! பட்டபடிப்பு படித்தவர்கள் 3 ஆண்டு சட்டபடிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் 3 years law course in tamilnadu apply online
அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக்கல்லூரிகளில் 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு ஏதேனும் ஒரு பட்டபடிப்பு படித்தவர்கள் 3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற அரசு மற்றும் தனியார் சட்டக்கல்லூரிகளில் வழங்கப்படும் 3 ஆண்டு எல்.எல்.பி சட்டப்படிப்பிற்கு (LL.B), நாளை (ஜூன் 29) முதல் தொடங்கி ஜூலை 19-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
2026-27 கல்வி ஆண்டில் 5 ஆண்டு எல்.எல்.பி சட்டப்படிப்பிற்கு சேர்க்கை முடிவடைந்த நிலையில், தற்போது 3 ஆண்டு சட்டப்படிப்பிற்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 ஆண்டு சட்டக்கல்லூரிகளில் சேர்வதற்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப் படிப்பானது 5 ஆண்டு, மூன்று ஆண்டு என இரு நிலைகளில் கற்றுத்தரப்படுகின்றது
அதில் 12 ம் வகுப்பு முடித்தவர்கள் 5 ஆண்டு சட்டப்படிப்பும், டிகிரி முடித்தவர்கள் மூன்று ஆண்டுகள் சட்டப்படிப்பும் படிக்கலாம்
3 ஆண்டுகால எல்எல்பி சட்டப் படிப்பில் சேர 19.07.2026 வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr. Ambedkar Law University) மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு சட்டக் கல்லூரிகளில், ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மூன்று ஆண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்பில் (L.L.B) 2026-2027 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியிலும் பயிற்றுவிக்கப்படும் 3 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு 24.07.2024 வரை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tndalu.ac.in என்ற இணைய முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
3 ஆண்டுகள் எல்.எல்.பி ஹானர்ஸ் சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பட்டியல் பழங்குடியினர் மற்றும் பட்டியல் வகுப்பைச் சாரந்தவர்கள் 55 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.3 ஆண்டுகள் எல்.எல்.பி சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை 45 சதவீதத்திற்கு குறையாமல் பெற்றிருக்க வேண்டும். பட்டியல் பழங்குடியினர் மற்றும் பட்டியல் வகுப்பைச் சாரந்தவர்கள் 40 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதார்கள் 10+2+3 அல்லது 10+3+3 என்ற முறையில் கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.tndalu.ac.in/
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
19..07.2026
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tndalu.ac.in/
Tags: தமிழக செய்திகள்

