ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை! Children under 15 banned from using social media in the UAE!
ஐக்கிய அரபு அமீரகத்தில், 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், சமூக வலைதளங்களை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. Children under 15 banned from using social media in the UAE!
ஐக்கிய அரபு அமீரகத்தில், (UAE) 15 வயதுக்கு உட்பட்டவர்கள், சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, இத்தடையை அமல்படுத்தும் முதல் ஆளாக ஐக்கிய அரபு அமீரகம் இருக்கிறது.
இந்த தீர்மானத்தின் படி, 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், சமூக வலைதளங்களின் கணக்குகளை கண்காணித்து முடக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இது குறித்து வெளியான அறிவிப்பில்:-
நாட்டில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவற்கான குறைந்தபட்ச வயது 15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வயது வரம்பிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களில் கணக்கு துவங்குவதோ, பயன்படுத்தவோ கூடாது. சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்க கூடாது.
சமூக வலைதளங்களில் பதிவுகளை பகிரக்கூடாது.சமூக வலைதளங்களில் 15 வயதுக்குட்பட்டோரின் கணக்குகளை கண்டறிந்து முடக்க வேண்டும். இதற்காக 12 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதையும் மீறி யாராவது சமூக வலைதளங்களை பயன்படுத்தினால் குறிப்பிட்ட அந்த சமூக வலைதள நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கான அதிகாரம் அமீரகத்தின் ஊடக மற்றும் தொலைதொடர்பு கட்டுப்பாடு அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சமூக வலைதள நிறுவனங்களுக்கு வார்னிங், அபராதங்கள், தடை விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்
