புதிய நீதி கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி போட்டி..!
புதிய நீதி கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி போட்டி..!
புதிய நீதிகட்சி தலைவர் ஏசி.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில்,
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு கீழ்கண்ட வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது.
மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் நடிகர் சுந்தர் சி அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் 30 3 2026 திங்கட்கிழமை அன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மற்றும் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட உள்ளது
இரண்டாவது வேட்பாளராக சென்னையில் திங்கட்கிழமை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுகப்படுத்த உள்ளோம் இடம் நேரம் விரைவில் தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது
சுந்தர் சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
