RailOne செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட்டுகளை வாங்கினால், 3% கட்டணச் சலுகை ரயில்வே அறிவிப்பு Get 3% discount on unreserved tickets when booked via RailOne App
RailOne செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட்டுகளை வாங்கினால், 3% கட்டணச் சலுகை ரயில்வே அறிவிப்பு From booking unreserved tickets with a 3% digital payment discount to checking live train updates and ordering food onboard.RailOne brings every railway service together in one seamless app—so you can focus on the journey, not the hassle.
டிஜிட்டல் வழி டிக்கெட்டை ஊக்குவிக்க, வரும் 14ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை 6 மாதங்களுக்கு இத்திட்டம் அமலில் இருக்கும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள R-Wallet Payment 3% Cashback சலுகை மாற்றமின்றி தொடரும் எனவும் தெரிவிப்பு|
ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் நிலவும் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, RailOne மொபைல் செயலி வாயிலாக முன்பதிவில்லா (Unreserved) டிக்கெட்டுகளைப் பெறும் பயணிகளுக்கு, பயணக் கட்டணத்தில் 3 சதவீதம் தள்ளுபடியாக வழங்கப்படும்.
இந்தச் சலுகைத் திட்டம் வரும் ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 14-ஆம் தேதி வரை என மொத்தம் ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஆர்-வாலட் (R-Wallet) பணப்பரிப்பை பயன்படுத்தி டிக்கெட் எடுப்போருக்கான 3 சதவீத கேஷ்பேக் சலுகை எவ்வித மாற்றமுமின்றித் தொடரும்” எனத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்
