Breaking News

விமானங்களில் ‛பவர் பேங்க்' பயன்படுத்த தடை விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி அறிவிப்பு Power Banks Can No More Be Used On Flights

அட்மின் மீடியா
0

விமானங்களில் ‛பவர் பேங்க்' பயன்படுத்த தடை விமான போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி அறிவிப்பு


விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்தி செல்போன் மற்றும் லேப்டாப்புகளுக்கு சார்ஜ் செய்ய தடை விதித்து மத்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது

விமானங்களில் பவர்பேங்க் பயன்படுத்தி செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை சார்ஜ் செய்ய தடை போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விமானத்தில் பவர் பேங்க் கொண்டு சென்றால் அதனை எப்படி வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விமானத்தில் பவர் பேங்க் கொண்டு செல்லலாம். ஆனால் விமானத்திற்குள் அதை பயன்படுத்தவோ அல்லது சார்ஜ் செய்யவோ அனுமதி இல்லை. லித்தியம் பேட்டரிகள் கொண்ட பவர் பேங்குகள் விமானத்தின் உள்ளே தீப்பிடிக்க வாய்ப்புள்ளதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தீ அபாயம் உள்ளதால் விமானங்களில் பவர்பேங்க் பயன்படுத்தி மற்ற சாதனங்களுக்கு சார்ஜ் செய்யவும் அல்லது பவர்பேங்க்கை சார்ஜ் செய்யவும் தடை விதித்தது DGCA ஆணையம்

மேலும் பவர்பேங் மற்றும் பேட்டரிகளை கைப்பையில் மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதி. விமானத்தின் உள்ளே மேலிருக்கும் உடமைகளுக்கான இடத்தில் கூட வைக்கக் கூடாது எனவும் கட்டுப்பாடு

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback