இன்றைய தலைப்புச் செய்திகள் NEWS HEADLINES
அட்மின் மீடியா
0
இன்றைய தலைப்புச் செய்திகள் NEWS HEADLINES
CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. பராசக்தி தணிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பராசக்தி' திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய மத்திய தணிக்கை வாரியம். திட்டமிட்டபடி இன்று 700 திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜனநாயகன் படத்தை வெளியிட அழுத்தம் தந்தது ஏன்? என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடுக்கடுக்கான கேள்வி. வழக்கு விசாரணை வரும் 21-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டதால், பொங்கலுக்கு ஜனநாயகன் வெளியாகாது,
ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய `ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பாளர். அனைத்தும் தங்கள் கட்டுப்பாட்டை மீறி நடந்து விட்டதாக உருக்கம்
தேர்தலில் போட்டியிட விருப்பமனு தந்தவர்களுடன் எடப்பாடி பழனிசாமி நேர்காணல். இன்று டெல்டா மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கிறார்
தமிழகத்தில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
வா வாத்தியார்' படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு. படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு உத்தரவு
அமலாக்கத்துறை சோதனையின் போது இடையூறு செய்ததாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது வழக்கு. வரும் 14-ஆம் தேதி விசாரணை
ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாததற்கு மன்னிப்பு கோரியது படத் தயாரிப்பு நிறுவனம்; விஜய்க்கு நிச்சயம் ஃபேர்வெல் நடத்த வேண்டுமெனவும் வெங்கட் கே நாராயணன் பேச்சு
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் இன்று கரையை கடக்க வாய்ப்பு; திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே கரையை கடப்பதால், உச்சக்கட்ட கண்காணிப்பு
25 திருத்தங்களுடன் பராசக்தி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம்; திட்டமிட்டபடி படம் இன்று வெளியாகும் நிலையில் வேகமாக விற்றுத்தீரும் டிக்கெட்டுகள்
நெல்லை மாவட்டத்தில் 90 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்பு படையினர் முகாம்; கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்
பராசக்தி படத்தில் இருந்து நீக்கப்பட்ட அறிஞர் அண்ணாவின் பேச்சு அடங்கிய காட்சி புரோமோவாக வெளியீடு; தணிக்கை வாரியம் நீக்கிய நிலையில், இணையத்தில் அமோக வரவேற்பு
பொங்கல் ரேஸில் இருந்து விலகியது விஜயின் ஜனநாயகன் திரைப்படம்; தணிக்கைச் சான்று வழங்கும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்
சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வரிசையில் மத்திய பாஜக அரசின் ஆயுதமாக மாறிவிட்டது சென்சார் போர்டு; தணிக்கை வாரியத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஜனநாயகன் தணிக்கைச் சான்று வழக்கில் இனி 21ஆம் தேதியே விசாரணை; தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்; பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உதவி மையம், முன்பதிவு கவுன்டர்கள் திறப்பு
திருப்பரங்குன்றத்தில் 144 தடை பிறப்பித்தது தங்களது முடிவு தான்; தங்களை யாரும் நிர்பந்திக்கவோ, அறிவுறுத்தவோ இல்லை என மதுரை ஆட்சியர், காவல் துணை ஆணையர் உயர்நீதிமன்ற அமர்வில் விளக்கம்
தே.மு.தி.க யாருடன் கூட்டணி அமைப்பது என முடிவெடுத்து விட்டதாக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு - திட்டமிட்டு நிதானமாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கட்சி மாநாட்டில் தகவல்
ஜனநாயகன் படத்திற்கு ஏற்பட்டுள்ள தடைகள் விரைவில் நீங்கும்; கடைசி நிமிடத்தில் தணிக்கை குழு சான்றிதழ் தர மறுத்ததால்தான் நீதிமன்றத்தை நாடியதாகவும் தயாரிப்பாளர் தகவல்
Tags: தமிழக செய்திகள்
.jpg)