News Headlines இன்றைய முக்கிய செய்திகள்
அட்மின் மீடியா
0
News Headlines
- வங்கக்கடலில் குறைந்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும் என தெரிவிப்பு.
- 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் மாபெரும் திட்டம். சென்னையில் நடந்த பிரம்மாண்ட விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- மாணவர்களுக்கு காலம் கொடுத்துள்ள 2வது நெருப்புதான் AI. ஒட்டுமொத்த உலகத்தையும் கையில் கொடுக்கவே மடிக்கணினி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- கல்வி சார்ந்து பல திட்டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசுக்கு நடிகர்கள் விஜய் சேதுபதி, மணிகண்டன் பாராட்டு. கல்வியை கெட்டியாக பிடித்து முன்னேற கார்த்தி அறிவுரை.
- திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு. இன்று தீர்ப்பளிக்கிறது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
- சத்குரு ஸ்ரீ தியாகராஜர் 179வது ஆராதனை விழாவை முன்னிட்டு வரும் 7ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
- 2வது நாளாக அமித்ஷாவை சந்தித்து பேசிய அதிமுக வேலுமணி. பாஜக 50க்கும் மேற்பட்ட தொகுதிகள் கேட்பதால் பேச்சுவார்த்தையில் இழுபறி என தகவல்.
- அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தலா ரூ.3000 வழங்க ரூ.6,687 கோடி நிதி ஒதுக்கீடு.பொங்கலை ஒட்டி 2.22 கோடி குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.3000 ரொக்கத்துடன், பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட உள்ளன.
- 2020 டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட உமர் காலித்துக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு.ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த 7 பேரில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் இருவருக்கு மட்டும் மறுப்பு. ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் ஜாமின் கோரி விண்ணப்பிக்கலாம் என நீதிபதிகள் தெரிவிப்பு.
- காலம் தந்துள்ள இரண்டாவது நெருப்பான ஏ.ஐ.யை சரியாக பயன்படுத்திக் கொள்ளவே லேப்டாப்புகள் வழங்கப்படுவதாக முதலமைச்சர் கருத்து | மாணவர்கள் தொடர்ந்து அப்டேட் ஆகிக்கொண்டே |இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்
- 2026 ஆஸ்கார் விருதுக்கான போட்டிப் பட்டியலில் நுழைந்தது மராத்தி மொழிப் படமான தஷாவதார் - உலகம் முழுவதிலுமிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களிலிருந்து தஷாவதார் தேர்வானதாக இயக்குனர் சுபோத் கானோல்கர் தகவல்
- அரசுப்பள்ளி மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பு ஆணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - இளம் மாணவர்களின் தனி உரிமையை பாதிக்கும் என நீதிபதிகள் அதிருப்தி
- இந்தியாவில் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட ரூ.4.5 லட்சம் கோடிக்கு மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி - பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
- தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல்
- சபரிமலை கோவில் தங்கம் திருட்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி - திருட்டில் கடவுளை -கூட விட்டு வைக்கவில்லையா, குறைந்தபட்சம் கோயிலையும், தெய்வத்தையுமாவது விட்டு வையுங்கள் என நீதிபதிகள் வேதனை
- தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் ஆயத்த பணிகள் தொடர்பாக, தேர்தல் ஆணையம், மத்திய ஆயுதப்படை போலீசார் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள், பணியாளர்கள் தேவை உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்
- தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகள் வரும் 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று திறந்திருக்கும் என உணவு வழங்கல் துறை இயக்குநர் அறிவிப்பு | பொங்கல் பரிசுத் தொகுப்பு 8-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ள நிலையில் உத்தரவு
Tags: தமிழக செய்திகள்
