Breaking News

News Headlines Tamil இன்றைய முக்கிய செய்திகள்

அட்மின் மீடியா
0

 News Headlines Tamil 



தென்காசி பழைய குற்றாலத்தில் தொடர் வெள்ளப்பெருக்கால், சீரமைக்கப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம். இரும்பு தடுப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் மொபைல் செயலி, வாட்ஸ்ஆப் எண், சமூக வலைத்தள கணக்குகளை இன்று அறிமுகம் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் முதலமைச்சர். பேச்சுவார்த்தைக்குப் பின் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பேட்டி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள். தமிழ்நாடு முழுவதும் 75,000 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது.

புகாரளிக்க வந்த இளைஞரை ஏ.டி.எம்-மிற்கு அழைத்துச் சென்று 15,000 ரூபாய் பறித்த சென்னை நுங்கம்பாக்கம் காவலர்கள் 3 பேர் சஸ்பெண்ட்..ஏ.டி.எம் மைய சி.சி.டிவி பதிவைக் கொண்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்த காவல் ஆணையர்.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா தரப்பில் சந்தனக்கூடு விழாவை மட்டுமே நடத்த வேண்டும்., ஆடு, கோழிகளை பலியிட கூடாது என மதுரை உயர்நீதிமன்ற அமர்வு இடைக்கால உத்தரவு..மாமிசத்தை கொண்டு சென்று சமைக்கவோ, அசைவ உணவை கொண்டு செல்லவோ கூடாது.,சந்தனக்கூடு விழாவில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் நீதிபதி ஸ்ரீமதி உத்தரவு பிறப்பிப்பு....

GROK AI மூலம் பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதாகப் புகார். பதிவுகளை உடனடியாக அகற்ற எக்ஸ் தளத்திற்கு ஒன்றிய அரசு கெடு.

2026ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி| கிராமத்தில் இன்று(ஜன.03) நடைபெறுகிறது 900 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் எஸ். ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைக்க உள்ளனர்.

தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல்... சென்னையில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிலவும் எனவும் கணிப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் ஜனவரி6 ஆம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; காவிரிப் படுகை, தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என கணிப்பு

ஒரு சிலரின் சுயநலத்தால் தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்வதாக அக்கட்சி எம்பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு; எவ்வித கட்டுப்பாடுமின்றி உட்கட்சி பிரச்னை தொடர்வதாகவும் வேதனை

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால் அவருக்குத்தான் கேடு; மீண்டும் அழைப்பு விடுத்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback