Breaking News

நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..! எந்த மாவட்டம் தெரியுமா local holiday

அட்மின் மீடியா
0

நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..! எந்த மாவட்டம் தெரியுமா


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அமைந்துள்ள தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா கடந்த 3-ம் தேதி தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. காவிரி கரையில் உள்ள அவரது சமாதி வளாகத்தில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றன. 

இவ்விழாவின் மிக முக்கிய நிகழ்வான 'ஆராதனை விழா' வருகின்ற ஜனவரி 7-ம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

இதனால் ஜனவரி 7-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். 

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 24-ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் அன்றைய தினம் செயல்படும் என்றும் ஆட்சியர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback