Breaking News

Headlines Today இன்றைய முக்கிய செய்திகள்

அட்மின் மீடியா
0

 Headlines Today இன்றைய முக்கிய செய்திகள்


கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் (ஜன.13) விடுமுறை அறிவிப்பு

போகி பண்டிகையான நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. 5 நாட்கள் தொடர் விடுமுறையால் மாணவர்கள் மகிழ்ச்சி.

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் புறப்படும் மக்கள். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்.

டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை. கரூர் நெரிசல் சம்பவம் குறித்து அதிகாரிகள் கிடுக்கிப்பிடி கேள்விகள்.

தலைநகர் டெல்லி, அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு காணாத மூடுபனி. குளிர் அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

ஹவாய் தீவில் மீண்டும் வெடித்துச் சிதறிய கிலாவியா எரிமலை. 20 அடி உயரத்துக்கு நெருப்புக் குழம்பு வெளியேறுவதால் பரபரப்பு.

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் மற்றும் அவர்களின் ஒரு படகையும் சிறைப் பிடித்தது இலங்கை கடற்படை.நெடுந்தீவு கடற்படை முகாமில் வைத்து 8 பேரிடமும் விசாரணை

பொங்கலை கொண்டாடும் விதமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் ஜன.14 முதல் 18 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. 15, 16, 17 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாக இருக்கிற நிலையில், கூடுதலாக போகிப் பண்டிகையான 14ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 நாட்கள் விடுமுறை.

அரிசி ரேஷன் கார்டுதாரர்களின் கண் கருவிழி சரிபார்ப்பு வாயிலாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க உத்தரவு விரல் ரேகை பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த புகாரை அடுத்து கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அறிவிப்பு.

இந்திய பஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், தங்கள் நாட்டின் வழியே பயணிக்கும்போது, விசா இல்லாத டிரான்சிட் போக்குவரத்துக்கு அனுமதி - பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி பிரதமர் முன்னிலையில் 19 ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தானபோது, அறிவிப்பு.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துகிறது தேர்தல் ஆணையம் - தமிழ்நாட்டில் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணையர்கள் பிப்ரவரி மாதம் நேரில் வர உள்ளதாக தகவல். 

கரூர் துயரம் தொடர்பாக விஜய்யிடம் இன்று நடைபெறவிருந்த சிபிஐ விசாரணை ஒத்திவைப்பு; டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின் சென்னை திரும்புவார் என தகவல்

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு 3,000 ரூபாய் பொங்கல் பரிசு; 3,40,000 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

ஆட்சியில் பங்கு கோரிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின், ராகுல்தான் முடிவு எடுப்பார்கள்; ஆட்சியில் பங்கு இல்லை என்ற ஐ.பெரியசாமியின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை பதிலடி

டெல்லி CBI அலுவலகத்தில் ஆஜரான தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம் விசாரணை நிறைவு; கரூர் துயரம் தொடர்பாக 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய அதிகாரிகள்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback