Breaking News

ஆவின் பால் விலை உயர்வு என பரவும் தகவல் உண்மையா..?

அட்மின் மீடியா
0

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதாகப் பரப்பப்படும் வதந்தி !



பரவும் செய்தி:-

ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருமடங்கு (6 ரூபாய்) விலை உயர்த்தப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன?

கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றவுடன் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

தற்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பது கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகை பால் பாக்கெட்டாகும். இதில் கூடுதலாக வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு உள்ளதுடன் கொழுப்புச் சத்து: 4.5% இதரச் சத்துக்கள்: 9% S.N.F. உயர்த்தப்பட்டு உள்ளது.

கொழுப்புச் சத்து: 4.5% மற்றும் இதரச் சத்துக்கள்: 8.5% S.N.F கொண்ட பழைய ஆவின் கிரீன் மேஜிக் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட் தற்போதும் அதே விலையில் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

தமிழ்நாட்டில் நாளென்றுக்கு ஆவின் மூலம் 31 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள், 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமார் 860 சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆவின் மூலம் பொது மக்களுக்கு சமன்படுத்தப்பட்ட பால், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், நிறைகொழுப்பு பால் மற்றும் டிலைட் பால் என 5 வகை பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழ்நாடு முழுவதும், ஆவின் பால் விலை மற்றும் வகைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும் தங்கு தடையின்றி ஆவின் பால் அனைத்து பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே ஆவின் பால் விலையேற்றம் என வெளியிடப்படும் செய்தி முற்றிலும் தவறு மற்றும் ஆதாரமற்றது என தெரிவிக்கப்படுகிறது.

Tags: FACT CHECK

Give Us Your Feedback