Breaking News

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம், தமிழக அரசு மேல்முறையீடு மனு தள்ளுபடி, உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் தமிழக அரசு மேல்முறையீடு மனு தள்ளுபடி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்புதனி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் எனவும் அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாகவும். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1-ந்தேதி உத்தரவிட்டார். 

தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா

நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 

அதன்படி, தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback