வங்க கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எங்கெல்லாம் மழை பெய்யும் முழு விவரம்
வங்க கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எங்கெல்லாம் மழை பெய்யும் முழு விவரம்
வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இன்று மேலும் வலுவடைய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வரும் சனிக்கிழமையும் கனமழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்