பொங்கலுக்கு ஊருக்கு போறிங்களா ? ஆம்னி பஸ் டிக்கெட் ரேட் அதிகமாக இருக்கா? புகார் செய்ய ஒரு போன் பண்ணுங்க போதும்..புகார் எண்கள்
பொங்கலுக்கு ஊருக்கு போறிங்களா ? ஆம்னி பஸ் டிக்கெட் ரேட் அதிகமாக இருக்கா? புகார் செய்ய ஒரு போன் பண்ணுங்க போதும்..புகார் எண்கள்
பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு (12.01.2026 முதல் 18.01.2026 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்குப்புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிக அளவில் தங்களது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வருவதை தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கீழ்காணும் எண்கள் மூலம் தொலைப்பேசி வாயிலாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்:
போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை 1800 425 6151
இணைப்போக்குவரத்து ஆணையரகம் சென்னை (வடக்கு) போன் நம்பர்: 99442 53404
இணைப்போக்குவரத்து ஆணையரகம் சென்னை (தெற்கு) 97905 50052
இணைப்போக்குவரத்து ஆணையரகம் மதுரை 90953 66394
இணைப்போக்குவரத்து ஆணையரகம் கோவை 91235 93971
துணைப் போக்குவரத்து ஆணையரகம்
விழுப்புரம் 96773 98825
வேலூர் 98400 23011
சேலம் 78456 36423
ஈரோடு 80569 40040
திருச்சி 90660 32343
விருதுநகர் 90257 23800
திருநெல்வேலி 96981 18011
தஞ்சாவூர் 95850 20865
Tags: தமிழக செய்திகள்

