தஞ்சை மருத்துவமனையில் நோயாளிகளை நிற்க வைத்து டிரிப்ஸ் ஏற்றிய நர்ஸ் - வைரல் வீடியோ
தஞ்சை மருத்துவமனையில் நோயாளிகளை நிற்க வைத்து டிரிப்ஸ் ஏற்றிய விவகாரம் - நர்சு பணிநீக்கம் !
நோயாளிகளுக்கு படுக்கைக்கு சென்று டிரிப்ஸ் ஏற்றாமல் நோயாளிகளை செவிலியர் அறைக்கு வரச் சொல்லி நிற்க வைத்தவாறு ட்ரிப்ஸ்கள் ஏற்றும் செவிலியர் வைரல் வீடியோ
நோயாளிகளை நிற்க வைத்து ட்ரிப்ஸ் ஏற்றிய செவிலியர் குறித்த வீடியோ வைரலான நிலையில் அவரை பணியிலிருந்து விடுவித்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சைக்கு வரும் புற்றுநோய் நோயாளிகளைச் செவிலியர் ஒருவர் படுக்கையில் வைத்து சிகிச்சை அளிக்காமல், அவர்களைச் செவிலியர் அறைக்கு வரவழைத்து நிற்க வைத்தவாறு 'ட்ரிப்ஸ்' (IV Drips) ஏற்றியுள்ளார்
இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/ThanthiTV/status/2008545512719552753
Tags: தமிழக செய்திகள்
