திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி பலியிட தடை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி பலியிட தடை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா தரப்பில் சந்தனக்கூடு விழாவை மட்டுமே நடத்த வேண்டும்., ஆடு, கோழிகளை பலியிட கூடாது என மதுரை உயர்நீதிமன்ற அமர்வு இடைக்கால உத்தரவு..
மாமிசத்தை கொண்டு சென்று சமைக்கவோ, அசைவ உணவை கொண்டு செல்லவோ கூடாது.,
சந்தனக்கூடு விழாவில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் நீதிபதி ஸ்ரீமதி உத்தரவு பிறப்பிப்பு....
மதுரை மாணிக்கமூர்த்தி தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் மலை ஹிந்துக்களுக்கு புனிதமான இடமாகும். மலை சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமானது. மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா அமைந்துள்ளது. மலையில் தர்கா நிர்வாகம் ஆடு, கோழி பலியிடக்கூடாது. அசைவ உணவு பரிமாறக்கூடாது. அது வழக்கம் என கருதினால் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் என உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தர்கா நிர்வாகம் மேல்முறையீடு செய்யவில்லை. சிவில் நீதிமன்றத்தை அணுகவில்லை.
டிச., 21 முதல் ஜன., 6 வரை கந்துாரி மற்றும் சந்தனக்கூடுவிழாவை தர்கா நிர்வாகம் நடத்துகிறது. விலங்கு பலியிடுதல் மற்றும் அசைவ உணவு பரிமாறுதல் கந்துாரியின் ஒரு முக்கிய பகுதியாகும். கந்துாரி நடத்த அனுமதி அளித்தது நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும்.மலை மீது முருகனின் தலவிருட்சமான கல்லத்தி மரம் உள்ளது. அதில் நிலா பிறை பொறித்த கொடி கட்டப்பட்டுள்ளது. அதை அகற்ற வேண்டும். மலையில் கந்துாரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி
உருஸ் திருவிழாவை மட்டுமே தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும். விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். விலங்குகளை பலியிடக்கூடாது. விலங்கு இறைச்சியை எடுத்துச் செல்லக்கூடாது. அசைவ உணவு சமைக்கக்கூடாது. எந்தவொரு அசைவ உணவையும் எடுத்துச் செல்லக்கூடாது. இந்த உத்தரவை மலையின் அடிவாரம் முதல் உச்சிவரை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்.
உயர்நீதிமன்ற முழு அமர்வு மற்றும் பல்வேறு வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சட்டம்-ஒழுங்கை போலீசார் கண்டிப்புடன் நிலைநாட்ட வேண்டும். கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோயில் மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் ஜன., 20ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Tags: தமிழக செய்திகள்
