Breaking News

ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதரவு

அட்மின் மீடியா
0

ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் விஜய்க்கு காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி ஆதரவு 



ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜயின் கடைசிப் படமாக உருவாகி இருக்கும் ஜனநாயகன்’ படம் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக ஜனநாயகன் திரைப்படம் வழக்கை எதிர்கொண்டுள்ளது.

விஜய் தனது ஜனநாயகன் படன் தான் கடைசி என்றும் , அதன் பிறகு முழு நேர அரசியல் பணியில் ஈடுப்பட போவதாக அறிவித்தார். இந்த சூழலில், ஜன நாயகன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. 

ஏற்கெனவே இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து, விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இப்படி இருக்கையில் ராகுல் காந்தியே நேரடியாக விஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளார்.

காங்கிரஸின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், “தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைத் தடை செய்யும் முயற்சி, தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான தாக்குதலாகும். தமிழக மக்களின் குரலை ஒடுக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஒருபோதும் வெற்றிபெற முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback