கள்ளக்குறிச்சியில் பயங்கரம் - மருமகளை தலைதுண்டித்து கொலை செய்த மாமியார்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் மாயமானதாக தேடப்பட்டு வந்த நந்தினி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தனது மகனை இரண்டாவதாக திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த தாய், தன் மகன் திருமணம் செய்த நந்தினி என்ற பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ள வளையம்பட்டை கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி. இவர் விரியூரை சேர்ந்த மருத்துவர் ரொசாரியாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு விரியூரில் கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நந்தினி கடந்த இரண்டு நாட்களாக திடீரென மாயமானார். இதனையடுத்து மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் வேறு வழியில்லாமல் சங்கராபுரம் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கடைசியாக தனது மனைவியை தாய் கிறிஸ்துவமேரி அழைத்து சென்றதாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.இந்த தகவலின் அடிப்படையில் கிறிஸ்துவமேரியை காவல் நிலையம் அழைத்து வந்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்த நிலையில், சோழம்பட்டு பகுதியில் அழகாபுரம் செல்லும் சாலையில் மணிமுத்தா ஆற்றின் கரையோரம் தனது மருமகளை தலையைத் துண்டித்து கொலை செய்து, ஆற்றங்கரையோரம் புதைத்து விட்டதாக போலீசாரிடம் மாமியார் கிறிஸ்தவமேரி கூறியுள்ளார். இந்த சூழலில் தான் சம்பந்தப்பட்ட இடத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதில், தனது தோழியுடன் சேர்ந்து நந்தினியின் தலையை துண்டாக வெட்டி, உடல் பாகங்களை ஆற்றில் புதைத்ததை அந்த பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.
சங்கராபுரம் வளையம்பட்டை சேர்ந்த ஏற்கனவே திருமணமான் நந்தினி, விரியூரைச் சேர்ந்த மருத்துவர் ரொசாரியோவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதனை விரும்பாமலேயே, திட்டம்போட்டு தனது தோழியுடன் சேர்ந்து மருமகளை க்றிஸ்டோபர் மேர் கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags: தமிழக செய்திகள்