புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.2,500 முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.2,500 முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், உயர்த்தி மாதம் ரூ.2,500 உதவித்தொகை வரும் ஜனவரி 12-ஆம் தேதி முதல் வழங்கப்படும்.மேலும் பொங்கலுக்கு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் பரிசுத்தொகையும் வழங்கப்படும் - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
இன்று செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி,
புதுச்சேரியில் வறுமை கோட்டிற்குள் கீழ் உள்ள சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்துள்ள, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த உதவித்தொகை ரூபாய் 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட உதவித்தொகை வரும் ஜனவரி 12ஆம் தேதி முதல் அதன் பயனாளர்களுக்கு வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு பரிசுத்தொகையும் வழங்கப்படும்" என தெரிவித்தார்.
Tags: புதுச்சேரி செய்திகள்