பெற்றோரைக் கைவிடும் அரசு ஊழியர்களின் 15% சம்பளம் பிடித்தம் செய்து அவர்களது பெற்றோருக்கு வழங்கப்படும் - தெலங்கானா முதலமைச்சர் எச்சரிக்கை!
பெற்றோரைக் கைவிடும் அரசு ஊழியர்களின் 15% சம்பளம் பிடித்தம் செய்து அவர்களது பெற்றோருக்கு வழங்கப்படும் - தெலங்கானா முதலமைச்சர் எச்சரிக்கை!
பெற்றோரைக் கைவிடும் அரசு ஊழியர்களின் 15% ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு, அவர்களது பெற்றோருக்கு வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடும் எச்சரிக்கை!
ஹைதராபாத் பிரஜா பவனில் நேற்று ‘பால பரோசா’ மற்றும் ‘பிரணய் டே கேர்’ எனும் இரு புதிய திட்டங்களை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.50 கோடி மதிப்புள்ள உபகரணங்களை வழங்கினார். இதில் அவர் பேசும்போது, இந்த அரசு உங்களுக்காக உள்ளது என்பதை உரக்க கூறவே இந்த திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். மாற்றுத் திறனாளிகள் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொண்டால் அந்த ஜோடிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். அதே சமயத்தில் மாற்றுத் திறனாளியை திருமணம் செய்பவருக்கும் ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
பிரணய் திட்டம் மூலம் முதியோரை நல்ல வழியில் பாதுகாக்க இந்த அரசு தீர்மானித்துள்ளது. இதனால் இனி பெற்றோரை ஒதுக்கி வைத்தாலோ, அனாதை இல்லங்களில் சேர்த்தாலோ, கைவிட்டாலோ அரசு ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் வரை மாதாமாதம் பிடித்தம் செய்து, அப்பணத்தை கைவிடப்பட்ட பெற்றோருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
பெற்றோரை கைவிடுபவர்களை நாம் தான் வழிக்கு கொண்டு வர வேண்டும். பெற்றோருக்கு உபயோகப்படா விட்டால், அவர்கள் இந்த சமூகத்துக்கு எப்படி உபயோகப்படுவார்கள்? என்றார்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
