Breaking News

இன்றைய தலைப்பு செய்திகள் - today headlines

அட்மின் மீடியா
0
இன்றைய தலைப்பு செய்திகள் - today headlines





ஓய்வூதியம் - கருணைத்தொகை பெறும் பயனாளிகளுக்கான அகவிலை நிவாரணம் – 1 ஜனவரி 2025 முதல் உயர்த்தப்பட்ட விகிதத்தில் வழங்க அனுமதித்து - ஆணை 

15.12.2025 இன்று கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் IndiGo6E விமான ரத்து  மேலும்  பயணிகள்  விமான பயணம் தொடர்பாக அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

சட்டப் பேரவை தேர்தல் 2026 ல்  நடைபெறுவதை முன்னிட்டு அதிமுகவின் சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் தங்களுடைய விருப்ப  மனு பெறப்படும்  என அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றிய ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக சாதனை.சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 1000-க்கும் மேற்பட்ட ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்

சங்கி படையையே அழைத்து வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி. தமிழ்நாட்டில் மட்டும் வெற்றி பெற முடியாததால் அமித்ஷா போன்றோருக்கு நம் மீது எரிச்சல் என்றும் விமர்சனம்.

தமிழ்நாட்டை சங்கி கூட்டத்தால் தொட்டுக்கூட பார்க்க முடியாது என திட்டவட்டம். லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் திரண்ட கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் முழக்கம்.

டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு. அதிமுகவிடம் 54 தொகுதிகள் கேட்க பாஜக திட்டமிட்டுள்ள நிலையில் முக்கிய ஆலோசனை.

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு. அரசியல் சூழல், தேர்தல் கூட்டணி விவரங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கவில்லை என பேட்டி

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டுப் படிவங்கள் வழங்குவதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு. வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

விருப்ப மனு என்ற பெயரில் அன்புமணி பண மோசடியில் ஈடுபடுவதாக ராமதாஸ் தரப்பு குற்றச்சாட்டு. நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபியிடம் புகார் மனு.

நாமக்கலில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்வு. புதிய உச்சமாக 6 ரூபாய் 25 காசுகள் என நிர்ணயம்.

சட்டமன்ற தேர்தலுக்கான த.வெ.க.வின் வேட்பாளர்களை விஜய் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். த.வெ.க. தலைவர் விஜய் சொல்வதை அப்படியே பின்பற்றுவோம் - திருச்செங்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த் பேச்சு

சென்னை மெரினா நீலக்கொடி கடற்கரையில் ஞாயிறு கலை விழா உற்சாகம். சிறுவர்கள் மேடையில் ஏறி உற்சாக நடனம்.

புதுக்கோட்டையில் பி.எஸ்.என்.எல். பணியாளர்கள் போல் நடித்து திருட்டு. மண்ணுக்குள் புதைக்கப்பட்ட ஒயர்களை தோண்டி எடுத்து காப்பர் திருடிய 6 பேர் கைது.

ஓசூரில் கடும் குளிருக்கு மத்தியிலும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை ரசித்த மக்கள். இடப்பற்றாக்குறையால் அனுமதி மறுக்கப்பட்டவர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு.

உயர்கல்வி கட்டமைப்பை மறுசீரமைக்க ஒருங்கிணைந்த புதிய ஆணையம். நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மசோதா தாக்கல் செய்ய அரசு திட்டம். 

ஆஸ்திரேலியாவில் கடற்கரையில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் உயிரிழப்பு. மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேரை சுட்டுக்கொன்ற காவல்துறை.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போன்டி கடற்கரை அருகே துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை - மகன் என தெரியவந்துள்ளது ஆஸ்திரேலியாவில் யூதர்களை குறி வைத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் 

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் எனும் பகுதியில் வரும் 18-ந்தேதி விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்.பி சுஜாதா, அனுமதி வழங்கினார்.
பல்வேறு நிபந்தனைகளுடன் காலை 11 மணியிலிருந்து 1 மணிக்குள் பிரச்சாரக் கூட்டத்தை நடத்திக் கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்.ஈரோடு பெருந்துறை அருகே விஜய் பரப்புரைக்கு காவல் துறை அனுமதி. அறநிலையத் துறைக்கு சொந்தமான இடம் என்பதால் 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூல்

கர்நாடகா ஆலந்த் தொகுதியில் வாக்குத் திருட்டுக்கு ஒரு ஓட்டுக்கு 80 ரூபாய் செலவிட்ட பாஜக. குற்றப்பத்திரிகையில் மோசடி அம்பலமானதாக அமைச்சர் பிரியங் கார்கே கருத்து.

H-1B, H-4 விசா விண்ணப்பதாரர்களின், FaceBook, Insta, X, Whatsapp 2 சமூக வலைதள கணக்குகளை சோதனையிட்டு ஆய்வு செய்யும் பணி இன்று முதல் தொடங்குகிறது H-1B விண்ணப்பதாரர்களை சார்ந்திருக்கும் பெற்றோர் அல்லது மனைவி உள்ளிட்டோரின் ஆன்லைன் கணக்குகள் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது

நேட்டோவில் சேரும் முடிவைக் கைவிடத் தயார் என ஜெலன்ஸ்கி அறிவிப்பு. உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் எதிர்ப்பால் திடீர் திருப்பம்.

அரசு முறை பயணமாக டிச.15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் முதலாவதாக இன்று(டிச.15) ஜோர்டன் செல்கிறார் பிரதமர்

உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரில் இந்திய அணி சாம்பியன். ஹாங்காங் அணியை 3-க்கு பூஜ்ஜியம் என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அசத்தல்.

மோடி, ஆர்எஸ்எஸ் ஆட்சியை அகற்ற காங்கிரஸ் உண்மையுடன் பாடுபடும் - டெல்லி ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி உறுதி

சென்னை மாநகராட்சியில் உரிமம் பெறாமல் நாய்கள் வளர்ப்பவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்க குழுக்கள் நியமனம். வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் அபராதம் விதிப்பு. சென்னையில் 57,602 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி கால்நடைப் பிரிவு இணையத்தில் பதிவு செய்துள்ள 98,023 நாய்களுக்கு உரிமம் பெறவில்லை என தகவல்

இன்று டெல்லி வருகிறார் கால்பந்தாட்ட நட்சத்திரம் மெஸ்ஸி -அருண் ஜெட்லி மைதானத்தில் பல அடுக்கு பாதுகாப்பு

வீடு இல்லாதவர்களுக்காக சென்னை மெரினாவில் இரவு நேர காப்பகம் - இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்

இந்தோனேசியாவை புரட்டிப்போட்ட கனமழை, வெள்ளம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,003 ஆக உயர்வு

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-க்கு-1 என முன்னிலை பெற்று அசத்தல்.4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை கழகமாக மாற்றிய ஓ. பன்னீர்செல்வம். டிசம்பர் 23ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், பெயர் மாற்றம்

பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம். 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சித் தலைமை அறிவிப்பு.தற்போதைய தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அறிவிப்பு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback