Breaking News

இன்றைய முக்கிய செய்திகள் Today Headlines Tamil

அட்மின் மீடியா
0

இன்றைய முக்கிய செய்திகள் Today Headlines Tamil


புத்தாண்டு, வார இறுதி நாட்களையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் நாளை முதல் ஜன.1ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்; சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக ஜன.3-ல் 525, ஜன. 4-ல் 765 சிறப்பு பேருந்துகள் இயக்கம் பயணிகள் முன்பதிவுக்கு www.tnstc.in மற்றும் கைபேசி செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்

தமிழகத்தில் 17 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது, அவர்கள் யாரும் தப்பிக்க முடியாது; நானும், அண்ணாமலையும் சேர்ந்து ஆடும் ஆட்டம் இனிமேல்தான் இருக்கப் போகிறது - நயினார்

திருத்தணியில் வட மாநில இளைஞரை வெட்டிய வழக்கில் 3 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு தாக்குதல் நடத்திய ஒரு சிறுவனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி இளஞ்சிறார் நீதி குழுமம் உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள தொழிலாளர் ஆணையரகத்தில் இடைநிலை சுகாதார பணி செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம் - 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை - படகையும் பறிமுதல் செய்து காரை நகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக தகவல்

தமிழ்நாடு அதிகம் கடன் வாங்கியதாக பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்ட கிராபிக்ஸ் படம் பொய்யானது; கூட்டணிக்குள் குழப்பத்தை உண்டாக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள் - செல்வபெருந்தகை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு ரத்தின அங்கியில் வலம் வந்து பரமபத வாசல் வழியாகப் பக்தர்களுக்குக் காட்சியளித்த பெருமாள்

மத்திய பட்ஜெட் தொடர்பாக பிரபல பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நிதித்துறை நிபுணர்கள், நிதி ஆயோக் நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள் என தகவல்

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா நலமோடு உள்ளார்; பாரதிராஜா உடல் நிலை குறித்து வெளிவரும் பிற தகவல்களை நம்ப வேண்டாம்”2 நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா, தற்போது நலமோடு இருப்பதாக குடும்பத்தார் தகவல்

அன்புமணியை சரியாக வளர்க்கவில்லை எனக்கூறி தான் கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் உடைந்து அழுத ராமதாஸ் - அன்புமணி தன்னை தினசரி அவமானப்படுத்துவதாகவும் நா தழுதழுக்க பேச்சு

தி.மு.க. மகளிரணி மாநாட்டிற்கு வந்த கூட்டத்தை பார்த்து 10 நாட்களுக்கு எதிர்கட்சியினர் தூங்கப் போவது இல்லை; அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகள் தமிழ்நாட்டில் பலிக்காது - உதயநிதி

ராமேஸ்வரத்தில் இன்று நடைபெறுகிறது காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியின் நிறைவு விழா - குடியரசு துணைத் தலைவர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பை முன்னிட்டு ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்

வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (80) உடல்நலக் குறைவால் காலமானார். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக பதவி வகித்த பெருமை கொண்டவர் கலிதா ஜியா. இதயம், நுரையீரல் சார்ந்த பாதிப்புகளுக்காக கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம். நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக நிர்வாகிகளிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு. ஜனவரி 14இல் பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க இதுவரை 7 லட்சத்து 28 ஆயிரம் பேர் விண்ணப்பம்

மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 4 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்த நடிகை நந்தினி பெங்களூருவில் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார்

சென்னையில் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டம் வாபஸ். 15 கோரிக்கைகளை ஏற்றது தமிழக அரசு

கடுமையான பனிமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள வட மாநிலங்கள்... மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வலைதளங்களில் பரப்ப வேண்டாம் திருத்தணியில் வடமாநில நபர் தாக்கப்பட்ட வீடியோவை சமூக என தமிழக அரசு வேண்டுகோள்

தமிழக அரசின் இலவச மடிக்கணினி திட்டத்தில் ஐடிஐ படிக்கும் மாணவர்களையும் சேர்க்க முடிவு. ஜனவரி 5இல் திட்டம் தொடக்கம்

ரஷ்ய அதிபர் புடின் வீட்டை நோக்கி, 91 ட்ரோன்களை கொண்டு தாக்குதல். உக்ரைனின் முயற்சி நடுவானில் முறியடிக்கப்பட்டதாக ரஷ்யா தகவல். ரஷ்ய அதிபர் புடின் வீடு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தகவல் 91 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட இருந்த முயற்சியை ரஷ்ய வான் பாதுகாப்பு படை அழித்ததாகவும் தகவல். ரஷ்ய அதிபர் புடின் வீடு மீது ட்ரோன் தாக்குதல் நடத்தவில்லை என உக்ரைன் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது

கமலாலயம் எழுதிக் கொடுக்கும் அறிக்கையை அதிமுக லெட்டர்பேடில் வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி. கோவையில் திமுக மேற்கு மண்டல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

திருத்தணியில் புலம் பெயர் தொழிலாளரை கத்தியால் தாக்கிய 3 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு. தாக்குதல் தொடர்பான வீடியோவை சமூக ஊடக தளங்களில் பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்.

120 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கி அழிக்கும் பினாகா ஏவுகணை. வெற்றிகரமாக சோதனை செய்தது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு.

உத்தரப்பிரதேசத்தில் சாலையில் காரை நிறுத்தி தம்பதியினரை மிரட்டிய பெண் போலீஸ் அதிகாரி. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு.

டெல்லியில் அதீத பனிமூட்டத்திற்கான சிவப்பு எச்சரிக்கை. கடும் பனி காரணமாக விமானம், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதிப்பு.

மத்தியப் பிரதேசத்தில் வீட்டின் படுக்கையில் படுத்து ஓய்வெடுத்த புலி. அருகே உள்ள புலிகள் காப்பகத்தில் இருந்து ஊருக்குள் புகுவதால் கிராம மக்கள் அச்சம்.

மும்பையில் பின்னோக்கி இயக்கப்பட்ட பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு. படுகாயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback