TNPSC தேர்வு அட்டவணை வெளியீடு - குரூப் 4 தேர்வு எப்போது annual planner 2026
2026-ம் ஆண்டிற்கான ஆண்டுத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இலட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும் GR-IV தேர்வு குறித்த அறிவிப்பு 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் தேதி அறிவிக்கப்படும் என்றும், குரூப் 2.2ஏ தேர்வு 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளியிப்பிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வாணைய வரலாற்றில் முதன்முறையாக, 2024 மற்றும் 2025 ஆண்டுகளில், அறிவிக்கை வெளியிடப்படும் நாள், தேர்வு நடைபெறும் நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டு, ஆண்டுத்திட்டம் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டு, ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டவாறு, குறித்த தேதியில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தற்போது 6 வகையான தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அறிவிப்பு அடுத்த ஆண்டு மே 20 ஆம் தேதி வெளியாகும். தேர்வுகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் தொடங்கும்.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெறும். குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி வெளியாகும்.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (பட்டயம்/ தொழிற்பயிற்சி தரம்) அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி வெளியாகும். தேர்வுகள் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் தொடங்கும்.
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி நடைபெறும். குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும்
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) அடுத்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி முதல் தொடங்கும். இந்த தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும்.
குரூப் 4 தேர்வு அடுத்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறும். குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகும்.
1 Combined Technical Services Examination (Non-Interview Posts)
Date of Notification 20.05.2026 Date of Commencement of Examination 03.08.2026
2 Combined Civil Services Examination – I (Group I Services)
Date of Notification 23.06.2026 Date of Commencement of Examination 06.09.2026
3 Combined Technical Services Examination (Diploma / ITI Level)
Date of Notification 07.07.2026 Date of Commencement of Examination 20.09.2026
4 Combined Civil Services Examination – II (Group II and IIA Services)
Date of Notification 11.08.2026 Date of Commencement of Examination 25.10.2026
5 Combined Technical Services Examination (Interview Posts)
Date of Notification 31.08.2026 Date of Commencement of Examination 14.11.2026
6 Combined Civil Services Examination – IV (Group IV Services)
Date of Notification 06.10.2026 Date of Commencement of Examination 20.12.2026
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://tnpsc.gov.in/english/annual_planner.html
Tags: முக்கிய செய்தி

