Breaking News

SIR வாக்காளர் படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

அட்மின் மீடியா
0

SIR படிவம் சமர்ப்பிக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா முழு விவரம் இதோ

வாக்காளர் பட்டியலை பிழையற்றதாகவும், முழுமையாகவும், வெளிப்படையாகவும் வைத்திருக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) அவ்வப்போது பல்வேறு திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் மிக முக்கியமானது, “சிறப்புத் தீவிரத் திருத்தம்” (Special Intensive Revision – SIR) எனப்படும் விரிவான சரிபார்ப்புச் செயல்பாடு ஆகும்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (SIR) என்பது இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய அளவிலான சரிபார்ப்புச் செயல்முறையாகும். 

வாக்காளர் பட்டியல் துல்லியமாகவும், முழுமையாகவும், தவறுகள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம். 

போலி வாக்காளர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் தகுதியற்றவர்களை நீக்குவதில் இத்திருத்தம் தீவிர கவனம் செலுத்துகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் (SIR) விண்ணப்பங்களை சமர்ப்பிக்கதற்கான காலக்கெடு  டிசம்பர் 14 ஆகும்

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவம்பர் 4 முதல் தொடங்கியுள்ளன. இதன் பகுதியாக தேர்தல் ஆணையம் வழங்கும் எஸ்.ஐ.ஆர். படிவம் வீடுவீடாக வழங்கப்படுகிறது. 

உங்களிடம் தேர்தல் அலுவலர் எஸ்.ஐ.ஆர். படிவம் இரு பிரதிகள் வழங்குவார் அதனை சரியாக பூர்த்தி செய்து ஒன்றை வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். மற்றொரு பிரதியில் அவரிடம் ஒப்புதல் பெற்று நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். 

வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால் (BLO) விநியோகிக்கப்படும் SIR கணக்கீட்டுப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவதற்குள் படிவத்தைச் சமர்ப்பிக்கத் தவறிய வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதைத் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம்.

SIR படிவம் சமர்ப்பிக்காவிட்டால்?

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் (SIR) முக்கிய நோக்கம், வாக்காளர்கள் தங்கள் குடியுரிமை உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே.ஒரு வாக்காளர் தனக்கு வழங்கப்பட்ட SIR படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கத் தவறினால், வாக்காளர்களின் பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும்.பெயர் நீக்கப்பட்டால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்

கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பிக்காதவர்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு தங்களை வாக்காளர்களாக சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ புதிதாக சமர்ப்பித்து தங்களின் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.

படிவம் 6-ஐ பயன்படுத்தி புதிய வாக்காளர்கள், கணக்கீட்டுப் படிவம் கிடைக்காதவர்கள், கிடைத்தும் சமர்ப்பிக்காதவர்கள் என அனைவரும் தங்களின் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback