ரயில் நிலையங்களில் தட்கல் டிக்கெட் வாங்க OTP கட்டாயம் இந்திய ரயில்வே அறிவிப்பு OTP To Be Mandatory For Tatkal Tickets Bought At Reservation Counters
ரயில் நிலையங்களில் தட்கல் டிக்கெட் வாங்க OTP கட்டாயம் இந்திய ரயில்வே அறிவிப்பு OTP To Be Mandatory For Tatkal Tickets Bought At Reservation Counters
ரயில் நிலையங்களில் தட்கல் டிக்கெட் வாங்க இனி OTP கட்டாயம் என ரயில்வே துறை அறிவிப்பு. மக்கள் தங்களது எண்ணுக்கு அனுப்பப்படும் OTPஐ தெரிவித்த பிறகே டிக்கெட் முன்பதிவாகும்.
52 ரயில் நிலையங்களில் சோதனை முறையில் உள்ள இந்த நடைமுறை விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிப்பு.
ரயில் டிக்கெட் எடுக்க 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்குகிறது.அப்படியும் டிக்கெட் கிடைக்காதவர்கள், தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பயணத்துக்கு ஒரு நாள் முன்பாக இந்த தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும்.
தற்போது இந்த தட்கல் முறையில் தான் சிறிய மாற்றத்தை ரயில்வே கொண்டு வந்துள்ளது.ரயில்வே டிக்கெட் புக்கிங் கவுன்ட்டர்களிலும் இந்த ஓ.டி.பி. முறை விரைவில் அமலாகவுள்ளது.
அதாவது, டிக்கெட் புக்கிங் படிவத்தில் நாம் எழுதும் செல்போன் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அந்த எண்ணை கொடுத்தால் மட்டுமே டிக்கெட் கிடைக்கும்.
பாதுகாப்பு காரணங்களுக்காகவும், உண்மையான பயணிகள் பயன் பெற வேண்டும் என்பதற்காகவும் இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்

