சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் வீடற்றவர்களுக்காக கட்டப்பட்டுள்ள தங்கும் இடம் வீடியோ Night Shelter is being built for the homeless people who uses Marina Beach
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரை பகுதியில் வீடில்லாமல் சாலையோரங்களில் வசிப்போரின் வசதிக்காக காப்பகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மெரினாவில் வீடில்லாத மக்களுக்கு தங்குமிடம்இதைத் தான் தமிழக அரசு உதவியுடன் சென்னை மாநகராட்சி செய்து காட்டியுள்ளது.
மெரினா கடற்கரையில் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள நாவலர் நகரில் அண்ணா நீச்சல் குளத்திற்கு அருகில் பெரிய தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 2,100 சதுர அடியில் 86 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டடப் பணிகள் நடந்து வருகின்றன. 80 பேர் வரை தங்க முடியும்.
இதில் மின் விசிறிகள், ஆர்.ஓ குடிநீர் வசதி, கழிவறைகள், படுக்கை விரிப்புகள், குழந்தைகள் விளையாடும் பகுதி உள்ளிட்டவை செய்து தரப்பட்டுள்ளன.
சென்னை மெரினாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தங்குமிடத்தை நிர்வகித்தல் மற்றும் பராமரித்தல் பணிகளை திருவள்ளூரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/2000427926509269099