Breaking News

இன்றைய முக்கிய செய்திகள் NEWS HEADLINES TODAY

அட்மின் மீடியா
0

இன்றைய முக்கிய செய்திகள் NEWS HEADLINES TODAY



நெல்லை ரெட்டியார்பட்டியில் திறக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தைப் பார்வையிட இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி!காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.10, பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 என கட்டணம் நிர்ணயம்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து பகுதி நிச்சயமாக வேண்டும் என கூறி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை! டென்மார்க் நாட்டின் கிரீன்லாந்து பகுதிக்கு மட்டும் தனியாக தூதரை நியமித்துள்ள ட்ரம்ப், அந்த பகுதி அமெரிக்காவுக்கு நிச்சயம் கிடைத்தாக வேண்டும் எனவும் பேச்சு.

திமுக என்ற ஆலமரத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. திராவிட மாடல் என்றாலே ஆதிக்கவாதிகளுக்கும், அவர்களின் அடிமைகளுக்கும் எரிவதாக முதலமைச்சர் விமர்சனம்.

அயோத்தியாக மாற்ற ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். சீமானும், விஜய்யும் ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளைகள் என திருமாவளவன் காட்டமான விமர்சனம்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்து இலங்கை கடற்படை அராஜகம். மீனவர்களின் படகையும் பறிமுதல் செய்து அட்டூழியம்.

திராவிடம், திராவிட இயக்கங்கள் என்றால் ஆதிக்கவாதிகளுக்கு எரிவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்; ஒடுக்கப்பட்ட மக்களின் கருத்துக்களுக்கு அடையாளமாக திராவிட மாடல் அரசு இருப்பதாகவும் பேச்சு

திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹுமாயூன் கபீர் புதிய கட்சி தொடங்கினார்... மம்தா பானர்ஜி ஆதரவு வாக்குகளை பிரிப்பார் என எதிர்பார்ப்பு

தேர்தலில் இருமுனைப் போட்டியால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என்பதை விஜய் உணர வேண்டும்; கூட்டணி விவகாரத்தில் விஜய் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

இன்றைய காலகட்டத்தில் தினமும் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது புத்தகத்தை வாசியுங்கள்... இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

பொறாமையால் கிணற்றில் தள்ளப்பட்ட இளைஞன்தான் அரசனாகி நாட்டையே காப்பாற்றினான்... கிறிஸ்துமஸ் விழாவில் பைபிள் கதையை சுட்டிக்காட்டி பேசிய தவெக தலைவர் விஜய்

இன்று தமிழ்நாடு வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்; அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திட்டம்

ஏழை இந்துக்களின் வாழ்வாதார பிரச்னைக்காக இந்துத்துவ அமைப்புகள் போராடி இருக்கின்றனவா? திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளன் கேள்வி

திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் தங்களுடைய கூட்டணியில் இணையலாம்; தவெகவிற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு

அமைச்சர்கள் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி...ஜனவரி 6ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார்; தற்போதைய அரசியல் சூழல் குறித்து எடப்பாடி பழனிசாமி பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல தடை...மீறினால் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அ.தி.மு.க. விருப்ப மனுக்களை பெறவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்கவும் இன்று கடைசி நாள் - தலைமை அலுவலகத்தில் கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்படக்கூடும் என தகவல்

பணி நிரந்தரம் வலியுறுத்தி 6வது நாளாக தொகுப்பு ஊதிய செவிலியர்கள் போராட்டம் - கூடுவாஞ்சேரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் காத்திருப்புப் போராட்டம்

போராடும் ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கையை ஏற்று 723 பணியிடங்கள் உருவாக்க முடிவு - பொங்கல் பண்டிகைக்கு முன் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

குரூப் 2, 2ஏ - முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback