ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டிக்கதை Jana Nayagan Audio Lanuch
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டிக்கதை
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய், தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விஜய் சொன்ன குட்டிக்கதை
ஒரு ஆட்டோக்காரன் கர்ப்பிணிப் பெண்ணை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செல்கிறார்
வெளியில் மழை பெய்கிறது, அப்பொழுது தன்னிடமிருந்த குடையை அந்த கர்ப்பிணியிடம் கொடுக்கிறார்.
இந்த குடையை நான் உங்களிடம் மீண்டும் எப்படி கொடுப்பது என்று அந்தப் பெண் கேட்கிறாள். அதற்கு வேறு யாருக்காவது தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து விடுமா என்று ஆட்டோக்காரன் சொல்கிறார்
அந்த கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை செல்கிறார். வாசலில் ஒரு பெரியவர் மழைக்கு நடுங்கி கொண்டு நிற்கிறார்.
உடனே அந்த கர்ப்பிணிப் பெண் அந்தக் குடையை பெரியவரிடம் கொடுத்து ஐயா இதை எடுத்துக்கொண்டு செல்லுங்கள் என்று சொல்கிறாள்
அம்மா நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது நான் எப்படி இந்த குடையை உங்களிடம் திருப்பிக் கொடுப்பது என்று அந்த பெரியவரும் கேட்கிறார்.
அதற்கு வேறு யாருக்காவது தேவைப்படுபவர்களுக்கு இதை கொடுத்து விடுங்கள் என்று சிரித்துக் கொண்டே சொல்கிறாள்.
அந்தப் பெரியவர் பேருந்து நிலையத்திற்கு வருகிறார், அங்கு பூ விற்கும் அம்மா மழைக்கு ஒரு அட்டையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார்.
தான் வைத்திருந்த குடையை அந்த பூ விற்கும் அம்மாவிடம் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார் பெரியவர்.
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன முழு விவரம்
https://www.adminmedia.in/2025/12/blog-post_28.html
அந்தப் பூ விற்கும் அம்மா மழையில் நனைந்து கொண்டு வந்த ஒரு பெண்ணிடம் குடையை கொடுத்து எடுத்துச் செல்ல சொல்கிறாள். அந்தப் பெண்ணும் தேங்க்ஸ் சொல்லிவிட்டு குடையை எடுத்துக்கொண்டு செல்கிறாள்.
மகள் மழையில் நனைந்தபடி வருவாள் என்று தந்தை ஒருவர் வீட்டின் வாசலில் காத்திருக்கிறார். அந்த தந்தை வேறு யாரும் இல்லை அவர் தான் அந்த ஆட்டோக்காரர்.
இந்த கதையில் இருந்து புரிந்து கொள்ள வேண்டியது, நாம் மற்றவர்களுக்கு எப்போதும் ஏதாவது ஒரு உதவியைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான்.
ஒரு பழமொழி ஒன்று உள்ளது வெள்ளத்தில் சிரமப்படுவோருக்கு படகு கொடுத்து உதவினால், அது நாளை பாலைவனத்தில் நீங்கள் சிரமப்படும் போது, ஒட்டகமாக வந்து நிற்கும் என்பது தான் அது" என்று தெரிவித்தார்.
Tags: அரசியல் செய்திகள்
