இன்றைய முக்கிய செய்திகள் headlines Today
அட்மின் மீடியா
0
இன்றைய முக்கிய செய்திகள் headlines Today
கேரளா -மலப்புரம் மாவட்டம் : புல்பட்டா பஞ்சாயத்தில் வெற்றி பெற்ற யுடிஎஃப் வேட்பாளர் ஏ.டி. உஸ்மான், தனது வெற்றி ஊர்வலத்தின் போது, கிணறு தோண்டிக் கொண்டிருந்த தொழிலாளர்களை கண்ட அவர், கிணற்றுக்குள் இறங்கி தனது நன்றியை தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் வரும் 27ம் தேதி சென்னை திருவேற்காட்டில் நடைபெறும் என அறிவிப்பு
ஒரு லட்சத்தை தாண்டிய தங்கத்தின் விலை! வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,00,120ஆக உயர்ந்தது, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.12,515ஆக உயர்ந்தது
கடலூரில் திமுக பிரமுகரை தாக்கியதாக 4 அளிக்கப்பட்ட புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்த விருத்தாசலம் காவல்நிலையத்தார் - சீமான் உட்பட 15 பேர் மீது வழக்கு . விருத்தாசலத்தில் சீமான் பயணித்த காரை வழிமறித்து, 'சீமான் ஒழிக' என கோஷம் போட்ட திமுக பிரமுகர் ரங்கநாதன் மீது தாக்குதல்
பள்ளிகளுக்கு டிச .24 முதல் ஜன .1 - ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது முன்னதாக ஜன . 2 - ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் ஜன .4 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகின . தற்போது , புதிய மாற்றமாக 9 நாள்கள் விடுமுறை என அரசு அறிவித்திருக்கிறது.
நாமக்கல்லில் முட்டை விலை உச்சம் தொட்டது; கடந்த 10 நாள்களில் 15 காசுகள் உயர்ந்து கொள்முதல் விலை ரூ.6.25 ஆக நிர்ணயம்!
புதுச்சேரியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், மின்சார இருசக்கர வாகனம், மற்றும், மின்சார 3 சக்கர வாகனம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, புதிதாக சாதி சான்றிதழ், மற்றும், வருமான சான்றிதழ் பெறத் தேவையில்லை என, அரசு அறிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இனி அமெரிக்காவை அதிகம் சார்ந்து இருக்கக்கூடாது என ஜெர்மன் அதிபர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் எச்சரித்துள்ளார்.2ஆம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் பாதுகாப்பை அமெரிக்கா உறுதி செய்து வந்த நிலையில், அந்த சகாப்தம் முடிந்துவிட்டதாகவும் ஃப்ரெட்ரிக் கருத்து.
சென்னையில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற வந்தே பாரத் ரயிலில், விருதாச்சலம் அருகே கல்வீச்சு சம்பவம் தொடர்பாக 4 சிறுவர்கள் கைது. 16, 17, மற்றும் 18 வயதுடைய நான்கு சிறார்களும் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்
தமிழகத்தின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.மேலும், வார இறுதி முதல் மீண்டும் குளிர் நிலவும்.செங்கல்பட்டு, சென்னை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம், காரைக்கால், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால், எக்ஸ்பிரஸ்வே சாலையில் 20 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து. சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது; திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை. டெல்லியில் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை சந்தித்த பின்னர் செல்வப்பெருந்தகை பேட்டி
தேமுதிக சார்பில் ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு. தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து பிரேமலதா விஜயகாந்த் வீடியோ வெளியீடு
திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கணேசன் உடல் நலக்குறைவால் காலமானார்
மெக்சிகோவில் தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி 7 பேர் உயிரிழப்பு
2026ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் இந்திய நேரப்படி இன்று பகல் 2.30 மணிக்கு தொடங்க உள்ளது. 244 இந்திய வீரர்கள் உட்பட 359 வீரர்கள் பட்டியலில் இடம்பிடிப்பு
இன்று சென்னை விமான நிலையம் அருகே ஒரு ஏக்கரில் ரூ.39.20 கோடி செலவில் அமையும் தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காந்தி மீதுள்ள வன்மத்தால் நூறு நாள் வேலைத்திட்டத்தில் அவரது பெயரை நீக்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம். பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்ட திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப்பார்ப்பதாகவும் காட்டம்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம், தனிநபர் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் அதிரடி வாதம்.
விஜய் பங்கேற்கும் கூட்டத்தின் போது விளம்பரப் பலகைகள் மீது தொண்டர்கள் ஏறாமல் இருக்க முள் கம்பிகள். தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
ராமதாஸ், அன்புமணி ஒன்றிணைவதற்கான வாய்ப்பு மிக குறைவு. பாமக ஒன்றிணையக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர் ஜி.கே.மணி என்றும் வழக்கறிஞர் பாலு குற்றச்சாட்டு.
ராமதாஸுடன் அன்புமணி சேர்ந்தால் பாமகவில் இருந்து விலகத் தயார் என ஜி.கே.மணி அறிவிப்பு. அன்புமணி துரோகிகள் என குறிப்பிடும் அனைவரும் பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என பேச்சு
நாளை தமிழகம் வரும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வேலூர் பொற்கோவிலில் வழிபாடு குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு வேலூர், ஸ்ரீபுரம் பகுதிகளில் பாதுகாப்பு பன்மடங்கு தீவிரம்
மற்ற மாநிலங்களைவிட புதிய திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு குறைவாகத்தான் கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து - வறுமையை முழுமையாக ஒழித்ததற்காகவே தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளதாகவும் குற்றச்சாட்டு.
100 நாள் வேலை திட்ட மசோதாவுக்கு பாஜகவின் கூட்டணி கட்சி தெலுங்கு தேசம் எதிர்ப்பு. புதிய மசோதா கவலையளிக்கும் விதமாக உள்ளதாகவும் கருத்து.
பீகாரில் அரசு நிகழ்ச்சியில் பெண்ணின் ஹிஜாப்பை பிடித்து இழுத்த முதலமைச்சர் நிதிஷ்குமார். 100 % சங்கியாக நிதிஷ் மாறிவிட்டரா என ராஷ்டிரிய ஜனதா தளம் கேள்வி.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது என்.ஐ.ஏ. லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட 2 பாகிஸ்தான் அமைப்புகள் மீது குற்றச்சாட்டு
ஜோர்டான் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு. இருநாட்டு உறவுகளில் புதிய வேகத்தை அளிக்கும் பயணம் என பிரதமர் மோடி பேச்சு
காவல் துறை அதிகாரிகள் வீடுகளில் ஆர்டர்லிகளாக உள்ள போலீசாரை திருப்பப் பெற்று காவல் பணிக்குப் பயன்படுத்த வேண்டும்...தமிழகம் முழுவதும் உள்ள காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழக பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவு.
பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் - பாஜக தலைமை அறிவிப்பு
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வாரங்களுக்குள் கண்டறிய உச்சநீதிமன்றம் உத்தரவு. மொழிப் பிரச்சினையால் பின் தங்கிய மாணவர்களுக்கான வாய்ப்பை தடுக்க வேண்டாம் என அறிவுறுத்தல்
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி உரிம சட்டம் மேலும் கடுமையாக்கப்படும் என்று பிரதமர் அந்தோணி அல்பேனீஸ் அறிவிப்பு - தனிநபர் எத்தனை துப்பாக்கிகளை வைத்திருக்கலாம் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை திருத்த அமைச்சரவை ஒப்புதல் என்றும் தகவல்...
டெல்லி வந்த லயோனல் மெஸ்ஸிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை பரிசளித்தார் ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா- அடுத்தாண்டு நடைபெறும் இந்தியா - அமெரிக்கா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டையும் வழங்கினார்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக தயாராகும் வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம். இரவை பகலாக்கும் வண்ண விளக்குகளை கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.
பிரேசிலின் குவாய்பா நகரில் பலத்த காற்று காரணமாக சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்தது. இந்த மாதிரிச் சிலை 1900-களின் முற்பகுதியில் நிறுவப்பட்டது
Tags: தமிழக செய்திகள்
