Breaking News

இனி ஜிமெயில் ஐடியை மாற்றலாம்..! முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

இனி ஜிமெயில் ஐடியை மாற்றலாம்..! முழு விவரம் இதோ


நாம் ஏற்க்கனவே உருவாக்கிய ஜிமெயில் ஐடியை (Gmail ID), வேலை மற்றும் தொழில்முறைத் தேவைகளுக்காக மாற்ற முடியாமல் தவிப்பவர்களுக்குக் கூகுள் ஒரு சிறந்த தீர்வை வழங்கியுள்ளது. 

தற்போது பயனர்கள் தங்கள் பழைய ஜிமெயில் யூசர்நேமை (User Name) மாற்றிக்கொள்ளும் புதிய வசதியைக் கூகுள் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த அப்டேட் மூலம், பயனர்கள் @gmail.com என முடிவடையும் தங்களின் தற்போதைய மெயில் முகவரியை மாற்றிவிட்டு, அதே கணக்கில் புதிய பெயரில் முகவரியைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும் முக்கியமாக மெயில் ஐடியை மாற்றினாலும் உங்கள் கூகுள் கணக்கில் உள்ள கூகுள் டிரைவ் (Drive), போட்டோஸ் (Photos), யூடியூப் (YouTube) மற்றும் பிளே ஸ்டோர் (Play Store) போன்ற சேவைகளில் உள்ள எந்தத் தரவுகளும் (Data) அழியாது. நீங்கள் வாங்கிய சப்ஸ்கிரிப்ஷன்கள் அல்லது கணக்கு வரலாற்றில் எந்த மாற்றமும் ஏற்படாமல் அனைத்தும் அப்படியே தொடரும். 


Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback