தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் AVM சரவணன் காலமானார் AVM Saravanan died
புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் (85) வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
திரைப்பட கலைஞர்கள் பலருக்கு, அடித்தளமாக இருந்தது, ஏவி.எம்., என்ற மாபெரும் நிறுவனம்.
ஏவி.எம்., நிறுவனம் தயாரித்த படங்கள், திரையரங்குகளில் வெளியாகும்போது, ஆரம்பத்தில் திரையில் காட்டப்படும், 'ஏவி.எம்., புரடக் ஷன்ஸ்' என்ற ஆங்கில எழுத்துக்கள் மற்றும் கம்பீரமான பின்னணி இசையும், சினிமா ரசிகர்களால் மறக்க முடியாதது.
80 ஆண்டு திரைப் பயணத்தில், 178 திரைப்படங்கள் மற்றும் 50 'டிவி' தொடர்களை தயாரித்து, நான்கு தலைமுறைகளை கடந்து நிற்கும் தனித்தன்மை வாய்ந்தது.
ஏவி.எம்., நிறுவனத்தை உருவாக்கி, இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு சகாப்தமாக விளங்கியவர், ஏவி.மெய்யப்ப செட்டியார். இவரது மூத்த மகனான ஏவி.எம்.சரவணன் இன்று உடல் நல குறைவால் காலமானார்
தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவர் இன்று வடபழநியில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். தற்போது ஏவிஎம் ஸ்டுடியோவில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
Tags: தமிழக செய்திகள்
