ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அரசு ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு
பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அரசு ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு
அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு
பழைய ஓய்வூதிய திட்டத்தை, முதல்வர் செயல்படுத்தி விட்டால், 70 சதவீத பிரச்னை சரியாகி விடும். ஜார்க்கண்ட், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட ஆறு மாநில அரசுகள், தேர்தல் வாக்குறுதி அளிக்காமல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளன.
எனவே, இறுதி கட்டமாக, வரும், 29ம் தேதி, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் கோரிக்கை ஆர்ப்பாட்டமும், அதை தொடர்ந்து, வரும் ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டமும் நடத்தப்படும் என அறிவித்தனர்
இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஓய்வூதிய திட்டங்கள் குறித்து 64 சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது
Tags: தமிழக செய்திகள்
