Breaking News

மீண்டும் மழை - இன்று 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

 மீண்டும் மழை - இன்று 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முழு விவரம் இதோ

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருநெல்வேலி, தென்காசியில் இன்று (டிச.,16) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழக தென் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். 

17-12-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback