Breaking News

பள்ளிகளுக்கு டிச .24 முதல் ஜன .1 - ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு half yearly exam leave in tamilnadu 2025

அட்மின் மீடியா
0
பள்ளிகளுக்கு டிச .24 முதல் ஜன .1 - ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு half yearly exam leave in tamilnadu 2025


தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 10-ந்தேதி தேர்வுகள் தொடங்கிய நிலையில், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. 

அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளும் வரும் 23-ந்தேதியுடன் முடிவடைகின்றன.இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிகளுக்கு டிச .24 முதல் ஜன .1 - ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது

முன்னதாக ஜன . 2 - ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால் ஜன .4 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகின . 

தற்போது புதிய மாற்றமாக 9 நாள்கள் விடுமுறை என அரசு அறிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் டிசம்பர் 24 தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி அரையாண்டு விடுமுறை

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback