Breaking News

டிச.18 ம்தேதி ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்புக்கு அனுமதி - செங்கோட்டையன் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்க்கு காவல்துறை அனுமதி

அட்மின் மீடியா
0

டிச.18 ம்தேதி ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்புக்கு அனுமதி - செங்கோட்டையன் தலைமையில் மாபெரும் கூட்டம்

ஈரோட்டில் வருகிற 18-ஆம் தேதி நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு மாவட்ட எஸ்.பி அனுமதி வழங்கியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே சரளை பகுதியில் தவெக தலைவர் விஜய் 16ம் தேதி, பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், தவெகவின் இந்த பரப்புரைக் கூட்டத்திற்கு மாவட்ட காவல்துறை 84 நிபந்தனை விதித்திருந்தது. இதனை தொடர்ந்து, கால அவகாசகம் தேவைப்படுவதால், தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை டிச.18ம் தேதி நடத்துவதாக, அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச்செயலாளருமான செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். 

பின்னர், அந்த தேதியில் கூட்டத்தை நடத்த அனுமதி வழங்க கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த தவக.வினர் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், விஜயமங்கலம் சரளை பகுதியில் தவெகவினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மாநாடு நடைபெறும் இடம் விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமானது என்பதால் இந்து சமய அறநிலைத்துறையினரிடம் அனுமதி வாங்க வேண்டும் என இந்து அறநிலைத்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்து அறநிலைத்துறை இடத்தை பயன்படுத்த 50 ஆயிரம் ரூபாய் வாடகையும் , டெபாசிட்டாக 50 ஆயிரம் ரூபாயும் நிர்ணயித்து இடத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதி அளித்துள்ளது. மேலும், கோவில் நிலத்தை பயன்படுத்த 5 நிபந்தனைகளையும் இந்து சமய அறநிலைய துறை விதித்துள்ளது.

50 ஆயிரம் ரூபாய் வாடகையும் , டெபாசிட்டாக 50 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.

ஒலிபெருக்கி வைத்து கூட்டம் நடத்த காவல்துறையினர் இடம் உரிய அனுமதி பெற வேண்டும்

கூட்டத்திற்கு வருபவர்களுக்கான குடிநீர் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

கூட்டம் முடிந்த பின்பு பிரச்சாரம் நடைபெற்ற இடத்தை சொந்த செலவில் தூய்மை செய்து கொடுக்க வேண்டும்.

இதன் பிறகு இந்த இடத்திற்கு எந்தவித உரிமையும் கோரக்கூடாது.. என  நிபந்தனைகளுடன் இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback