மகளிர் உரிமைத்தொகை 1000 இல்லை அதுக்கும் மேல - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மகளிர் உரிமைத்தொகை 1000 இல்லை அதுக்கும் மேல - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கிவைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எல்லாருக்கும் எல்லாமும் என்ற சமத்துவ சமுதாயம் வர வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அரசின் திட்டங்கள் என்பது கொள்கை, சிந்தனையின் செயல் வடிவமாகும். வரலாற்றை மாற்றி எழுதும் திட்டம் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.
புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டங்களால் குடும்பங்களின் சேமிப்பு அதிகரித்துள்ளது. ஒரு திட்டம் மக்களை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதுதான் முக்கியம். திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்களால் பெண்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ரூ.1,000 வழங்குவது தொடக்கமே, அது நிச்சயம் உயரும்” என உறுதி அளித்தார்.
வரலாற்றில் இல்லாத வகையில், குடும்பத் தலைவிகளின் உழைப்பை அங்கீகரித்து வரும் #திராவிட_மாடல்_அரசு, அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வளர்ந்து சாதனைப் படைக்க எந்நாளும் பக்கபலமாய் இருக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.Image
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டு மகளிரின் பொருளாதார விடுதலையை உறுதி செய்து வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் விரிவாக்க விழா மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற போது பங்கேற்றோம். 1 கோடியே 13 லட்சத்துக்கும் அதிகமான மகளிருக்கு கடந்த 27 மாதங்களாக மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 16.94 லட்சம் மகளிரும் இன்றிலிருந்து பயனடைய உள்ளார்கள். இதன் மூலம், இத்திட்டத்தில் பயனடையும் மகளிரின் எண்ணிக்கை மொத்தம் 1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 என உயர்கிறது
தமிழ்நாட்டு மகளிரின் முன்னேற்றத்துக்கு மேலும் வலுசேர்க்க, உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்ற இனிப்பான செய்தியையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இந்நிகழ்வில், #திராவிட_மாடல் அரசின் திட்டங்களால் பயனடையும் பெண்களின் நெகிழ்ச்சி உரைகளால் உணர்ச்சி வெள்ளத்தில் நிறைந்தது சென்னை நேரு விளையாட்டரங்கம். வரலாற்றில் இல்லாத வகையில், குடும்பத் தலைவிகளின் உழைப்பை அங்கீகரித்து வரும் #திராவிட_மாடல்_அரசு, அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வளர்ந்து சாதனைப் படைக்க எந்நாளும் பக்கபலமாய் இருக்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை உயரும்- மு.க.ஸ்டாலின்By Aishwarya G Updated: Dec 12, 2025, 21:21 IST21:21:37ச்https://cdn.adgebra.net/images/webp/2028_10013_303163/1200x720 - 06_300x250.webpStar Health Insurance Coverage for unexpected medical expensesSponsored by StarHealth Insurance"வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கம் தொடக்க விழா முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவருகிறது.recommended byHearAI சக்தியுடன் செவிமுடிவுச் சாதனம் ஆச்சர்ய விலையில்இதைப் படிக்காமல் செவிமுடிவுச் சாதனம் வாங்காதீர்கள்மேலும் அறிந்துகொள்ள
Tags: தமிழக செய்திகள்
