10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் காவலர் வேலைவாய்ப்பு SSC GD Constable Recruitment 2026
10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் காவலர் வேலைவாய்ப்பு SSC GD Constable Recruitment 2026
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்எஸ்சி நிரப்பி வருகிறது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் கான்ஸ்டபிள் (GD) பணிகளுக்காக 25,487 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:-
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:-
விண்ணப்பதாரர்கள் 01.01.2026 தேதியன்று 18 வயது முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 2003 க்கு முன்பாகவோ, 01.01.2008 க்கு பிறகோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
மாத சம்பளம்:-
இந்தப் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாதம் ரூ. 21,700 முதல் ரூ. 69,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க:-
விண்ணப்பிக்க விரும்புவோர் https://ssc.gov.in/login என்ற ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பக் கட்டணம்:-
பொதுப் பிரிவினருக்கு ரூ. 100 ஆகும்.
பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற பிரிவினருக்குக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
31.12.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்;-
https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/notice_01122025.pdf
Tags: வேலைவாய்ப்பு
