தமிழ்நாட்டில் ஹோட்டல் ஊழியர்களுக்கு குடல் காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம் அதிரடி அறிவிப்பு Vaccination for enteric fever mandatory for hotel staff in TN
தமிழ்நாட்டில் ஹோட்டல் ஊழியர்களுக்கு குடல் காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம் அதிரடி அறிவிப்பு Vaccination for enteric fever mandatory for hotel staff in TN
உணவகங்களில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் மூலம் காய்ச்சல் பாதிப்பு மற்றும் நோய் தொற்று பரவல் ஏற்படுவதாக புகார் எழுந்து உள்ள நிலையில் ஹோட்டலில் பணியாற்றக் கூடிய பணியாளர்களுக்கு தடுப்பூசியை செலுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சிறிய தேநீர் கடைகளிலிருந்து பெரிய ரெஸ்டாரண்ட்கள் வரை அனைத்து உணவகங்களும் உணவு பரிமாறும் பணிகளிலும் ஈடுபடும் ஊழியர்கள் கட்டாயமாக குடல் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை வலியுறுத்தியுள்ளது.
உணவகங்களில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் மூலம் காய்ச்சல் பாதிப்பு மற்றும் நோய் தொற்று பரவல் ஏற்படுவதாக புகார் எழுந்து உள்ள நிலையில் ஹோட்டலில் பணியாற்றக் கூடிய பணியாளர்களுக்கு (Enteric Fever) தடுப்பூசியை செலுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.ஹோட்டலில் உணவு பரிமாறுபவர்கள், உணவு தயாரிப்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களுடைய கடையில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500 செலுத்தி தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்.
மேலும் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பிறகு மருத்துவ சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்ட சான்றிதழை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அனைத்து ஹோட்டல்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 2 ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசியையை செலுத்திக் கொள்ள வேண்டும்'' என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்
