சொந்தமா தொழில் தொடங்க போறிங்களா அகர்பத்தி தயாரிப்பு பயிற்சி அளிக்கும் தமிழக அரசு உடனே விண்ணப்பியுங்கள் Training on Agarbatti
சொந்தமா தொழில் தொடங்க போறிங்களா அகர்பத்தி தயாரிப்பு பயிற்சி அளிக்கும் தமிழக அரசு உடனே விண்ணப்பியுங்கள் Training on Agarbatt
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் அகர்பத்தி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வரும் 25.11.2025 முதல் 26.11.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற உள்ளது. பயிற்சி நடைபெறும் இடம்: EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600 032.
இந்த முயற்சி, பாரம்பரிய மற்றும் அதிக தேவை உள்ள அகர்பத்தி பொருட்களை உற்பத்தி செய்ய தேவையான திறன்களும் அறிவும் கொண்ட தொழில்முனைவோர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களை ஊக்கப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் கற்றுக்கொடுக்கப்படும் தயாரிப்புகள்
1. 3-இன்-1 அகர்பத்தி
2. 5-இன்-1 அகர்பத்தி
3. மூலிகை அகர்பத்தி
4. சாம்பிராணி
5. கணினி சாம்பிராணி
6. குங்கிலியம் சாம்பிராணி
7. எசென்ஷியல் ஆயில் அகர்பத்தி
8. கற்பூரக் கேக்
9. ரோஜா நீர்
10. பூஜை எண்ணெய் தயாரித்தல்
11. மூலிகை மெழுகுவர்த்திகள்
12. ஓமம் நீர்
13. வெங்காயர் தயாரித்தல்
14. சந்தன மாத்திரைகள்
15. பித்தளை மற்றும் செம்பு சுத்திகரிப்பு பொடி
16. வெள்ளி சுத்திகரிப்பு திரவம்
17. பித்தளை மற்றும் செம்பு சுத்திகரிப்பு திரவம்
இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் 18 வயதிற்கு மேல் மற்றும் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் விடுதி வசதி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். பயிற்சிக்கு முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு மற்றும் முன்பதிவிற்கு www.editn.in அல்லது 9380221280/9840114680 என்ற எண்களில் அலுவலக நேரத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை) தொடர்புகொள்ளலாம். முகவரி தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை. ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032.
மேலும் விவரங்களுக்கு
www.editn.in
அல்லது
9360221280/9840114680 என்ற எண்களில் தொடர்பு கொள்க
Tags: தொழில் வாய்ப்பு
