மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை வென்றார் மெக்சிகோவின் பாத்திமா போஷ் Miss Universe 2025 Fatima Bosch
2025ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ் வென்றார். கடந்த ஆண்டு வெற்றியாளரான டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கஜேர் தீல்விக்கிடமிருந்து பாத்திமா போஷ் கிரீடத்தைப் பெற்றார். Miss Universe 2025 Fatima Bosch
மிஸ் யுனிவர்ஸ் 2025 என்பது 74வது மிஸ் யுனிவர்ஸ் போட்டியாகும், இது தாய்லாந்தின் நோந்தபுரியில் உள்ள பாக் கிரெட்டில் உள்ள இம்பாக்ட் சேலஞ்சர் ஹாலில் நவம்பர் 21, 2025 அன்று நடைபெற்றது.
தாய்லாந்தின் வீணா பிரவீனர் சிங் முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தார். இவர் முதல் ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டார். மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற, பாத்திமா போஷ்க்கு வாழ்த்துகளை பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட மனிகா விஸ்வகர்மாவால், முதல் 12 இடங்களுக்குள் வர முடியவில்லை.
Tags: வெளிநாட்டு செய்திகள்
