Breaking News

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் அசினாவிற்கு மரண தண்டனை விதிப்பு Crimes against humanity Bangladesh's ousted PM Sheikh Hasina sentenced to death

அட்மின் மீடியா
0

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் அசினாவிற்கு மரண தண்டனை விதிப்பு Crimes against humanity Bangladesh's ousted PM Sheikh Hasina sentenced to death

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் அசினாவிற்கு வங்கதேச நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில், தனது அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொலை செய்ய உத்தரவிட்டதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என்பதை உறுதி செய்ததுடன் மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்.

ஷேக் அசீனா வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஆவார். இவர் வங்கதேசத்தின் ஸ்தாபகத் தலைவர் சேக் முஜிபுர் ரகுமானின் மகள் மற்றும் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் 1996 முதல் 2001 வரையிலும், 2009 முதல் ஆகஸ்ட் 2024 வரையிலும் பிரதமராகப் பதவி வகித்தார். சமீபத்தில், வங்காளதேசத்தில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து அவர் பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback