தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த பின் செங்கோட்டையன் முதல் பிரஸ்மீட் - பேசியது என்ன முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த பின் செங்கோட்டையன் முதல் பிரஸ்மீட் - பேசியது என்ன முழு விவரம்
சென்னை பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “நான் எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்டவன். அவருக்கு பின் அணிவகுத்து நின்ரவன். எம்ஜிஆர் மறைந்தபின் அதிமுக இரண்டாக பிளவுற்றபோது ஜெயலலிதா பின்னால் அணிவகுத்தேன். அதிமுகவிற்காக அர்ப்பணித்துக் கொண்டவர் என ஜெயலலிதாவே என்னை பாராட்டினார்.
1975 ஆம் ஆண்டு பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதற்காக எம்ஜிஆரால் பாராட்டப்பட்டவன் நான். தவெகவில் நான் இணைந்ததற்கு காரணங்கள் உண்டு. திமுகவும் அதிமுகவும் வேறு வேறு அல்ல. ஒன்றாக இணைந்து பயணிக்கிறார்கள். திமுகவிடம் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை. தேசிய கட்சியினரோ, திமுகவினரோ என்னை சந்தித்து பேசவில்லை. பாஜகவினர் உள்ளிட்ட எந்த கட்சியினரும் என்னை சந்திக்கவில்லை.
தூய்மையான ஆட்சி நடத்த ஒருவர் தேவை என்பது மக்கள் மனதில் தோன்றியுள்ளது. இளவல் விஜய் இதற்காக மாபெரும் இயக்கத்தை கட்டமைத்துள்ளார்” என்றார்.
விஜய் தலைமையிலான தவெகவிற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கின்றன. புரட்சித் தலைவர் மறைவுக்குப் பிறகு புரட்சித் தலைவி வழியில் நான் பயணத்தை மேற்கொண்டேன். அம்மா மறைவுக்குப் பிறகு காலச்சூழலில் பல்வேறு கூறுகளாக இந்த இயக்கம் பிரிந்தது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்தினோம்.
தமிழ்நாட்டில் தூய்மையான அரசியலை விஜய் முன்னெடுத்துள்ளார்.நான் என்று ஒருவன் நினைத்தால் தான் என்று ஆண்டவன் பார்த்துக் கொள்வான். 2026 தேர்தலில் மக்கள் புரட்சியை உருவாக்கி தவெகவிற்கு மக்கள் வெற்றியை தருவார்கள்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக புதியவர் வர வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது. எல்லா மாநிலங்களிலும் மாற்றம் நிகழ்கிறது. தமிழ்நாட்டிலும் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். 2026ல் விஜய் தலைமையில் புனித ஆட்சி அமையும். ஜெயலலிதா ஆட்சியை புனிதமான ஆட்சி இல்லை என்று கூறவில்லை” என்றார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
