முகவரி மாற்றம் செய்த வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு
முகவரி மாற்றம் செய்த வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்ப்
கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர திருத்தம் 2026 ஆனது 01.01.2026-ஐ தகுதி நாளாக கொண்டு நடைபெற்று வருகிறது. நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15,92,872 வாக்காளர்கள் உள்ளார்கள்.
இதில் முதற்கட்டமாக வாக்காளர்களின் வீடுகள் தோறும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சென்று கணக்கீட்டு படிவம் விநியோகம் செய்யும் பணி 04.11.2025 முதல் நடைபெற்று வருகிறது. இப்பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கீட்டு படிவங்கள் 95.99 சதவிகிதம் வாக்காளர்களுக்கு தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது. தற்போது குடியிருப்பு பகுதியில் வசிக்காதவர்கள் / முகவரி மாற்றம் செய்தவர்கள் என 5 முதல் 10 சதவிகிதம் வாக்காளர்கள் பெரும்பாலும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ளனர் என தெரிய வருகிறது.
இவ்வகையான வாக்காளர்கள் தங்களது பெயர் பிற சட்டமன்ற தொகுதியில் பெயர் இல்லை என்பதை உறுதி செய்து தங்களுக்கு எந்த சட்டமன்ற தொகுதியில், எந்த பாகத்தில் வாக்குரிமை உள்ளதோ. அந்த பாகத்திற்குரிய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சென்று கணக்கீட்டு படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கணக்கீட்டு படிவத்தினை பூர்த்தி செய்து திரும்ப வழங்கினால் மட்டுமே வாக்காளர்களது பெயரானது வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். இவ்வாறாக, குடியிருப்பு பகுதியில் வசிக்காதவர்கள் / முகவரி மாற்றம் செய்த வாக்காளர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்பணியினை இம்மாவட்டத்தில் நிறைவு செய்வதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
Tags: தமிழக செய்திகள்
