கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர் கம்பத்தை பிடித்து தொங்கிய போது கீழே சரிந்து உயிரிழப்பு... வைரலாகும் வீடியோ
கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர் கம்பத்தை பிடித்து தொங்கிய போது கீழே சரிந்து உயிரிழப்பு... வைரலாகும் வீடியோ A national player was killed on the spot while playing basketball IN Haryana.
ஹரியானா மாநிலம் ரோதக் என்ற இடத்தில் கூடைப்பந்து கம்பத்தை பிடித்து தொங்கிய போது கம்பம் சரிந்து விழுந்ததில் தேசிய விளையாட்டு வீரர் ஹார்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கூடைப்பந்து தேசிய வீரர் ஹார்திக் நேற்று பயிற்சியில் ஈடுப்பட்டு கொண்டிருந்துள்ளார். மைதானத்தில் இருந்த கூடைப்பந்து கம்பம் சரியாக பொருத்தப்படாமல் இருந்துள்ளது. அவர் பயிற்சியில் அந்த கம்பத்தை ஓடி வந்து பிடித்து தொங்கும் போது திடீரென அந்த கம்பம் அவர் மீது சரிந்து விழுந்தது.
கூடைப்பந்து வீரர்கள் வழக்கமாக இதுபோன்ற பயிற்சிகளைச் செய்வார்கள். ஹார்திக் முதலில் இதைச் செய்யும்போது எல்லாம் நார்மலாகவே இருந்துள்ளது. இருப்பினும், இரண்டாவது முறையாக அதைச் செய்தபோது எதிர்பாராத விதமாகக் கூடைப்பந்துக் கம்பம் அப்படியே சாய்ந்து அவர் மீது விழுந்தது.
அதன் முழு எடையும் அவரது மார்பின் மீது இறங்கியது.இதனை பார்த்த சக வீரர்கள் மற்றும் நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர்.. அதன் முழு எடையும் அவரது மார்பின் மீது இறங்கியதில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழிந்தார். இதன் காட்சி வெளியாகி மனதை உருக்கியுள்ளது.
அரியானாவில், ரோத்தக் மற்றும் பகதூர்கர்ஹ் ஆகிய இடங்களில் கூடைப்பந்தாட்டப் பயிற்சி மைதானங்களில் கூடைப்பந்தாட்டக் கம்பம் விழுந்ததில் இரண்டு இளம் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1993710323552145709
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ