குவைத்தில் பணியாற்றிய இந்திய பெண்மணி மரணம் முழு விவரம் இதோ
அட்மின் மீடியா
0
குவைத்தில் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்துவந்த கேரளா, இடுக்கியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மனைவி ரெஷ்மி(47),
மாரடைப்பு ஏற்பட்டு அமிரி மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார்.
உயிரிழந்த ரெஷ்மியின் உடலை இந்தியா கொண்டு செல்ல தேவையான ஆவணப்பணிகள் நடைப்பெற்று வருகிறது.
குவைத்தில் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த இந்திய கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் காஞ்சியார் பகுதியைச் சேர்ந்த ரெஷ்மி (47), பணியிடையே திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் அவரின் முதலாளியால் அமிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் சிகிச்சையளித்தும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இவரின் கணவர் விஸ்வநாதன். மறைந்த ரெஷ்மியின் உடலை இந்தியா கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் ஓஐசிசி கெயர் குழுவின் தலைமையில் நடைபெற்று வருகின்றன